மொழியதிகாரம்
71
சந்தி சிரித்தல், சந்தியில் நிற்றல், சந்தி மறித்தல், சந்தியில் விடுதல் என்று உலக வழக்கிலும், சந்தி மிதித்தல் (திருவிளை. உக்கிர.27), “சதுக்கமுஞ் சந்தியும்" என்று செய்யுள் வழக்கிலும், ஊன்றியிருத்தல் காண்க. சந்திக் கோணம் என்பது ஒரு தேருறுப்பு (பெருங். உஞ்சைக். 58:51).
அந்து, சந்து என்னும் வினைமுதனிலைகள் இகரவீறு பெற்று உண்ணி, கொல்லி என்பனபோலச் செய்வான் பெயர்களாகி (Noun of agency), பின்னர் அஞ்சிக்கை, இரட்டித்தல் என்பனபோல் மீண்டும் முதனிலைகளாய்ப் புடைபெயர்ந்தன என அறிக.
அந்து -சந்து. அந்து - அந்தி. சந்து சந்தி. அந்தி - அந்திப்பு. சந்தி - சந்திப்பு.
ஆராய்ச்சியின்மையாலும் ஏமாளித்தன்மையாலுமே, பல தென்சொற்கள் வடசொல்லெனத் தமிழராலும் நம்பப்பட்டு வருகின்றன. தென்சொல்லை வடசொல்லென ஏமாற்றும் வடமொழியாளரைச் சந்திக்கிழுக்கும் சொற்களுள், சந்தி என்பதும்
ஒன்றாம்.
T
அந்தோ - ஹந்த (nt) - இ.வே.
.
அப்பம் - அபூப (இ.வே.)
அ
ம. அப்பம், தெ. அப்பமு, க., து. அப்ப.
உப்புதல் = ஊதுதல், எழும்புதல், பருத்தல்.
உப்பு (உப்பம்) - அப்பம். ஊது - ஊத்து = பருக்கை. ஊத்து + அப்பம் = ஊத்தப்பம்.
அப்பளம்
பர்ப்பட (t)
தெ.அப்பளமு, க. அப்பள. ம. பப்படம்.
அப்பளித்தல் = சமமாகத் தேய்த்தல் அப்பளி - அப்பளம்.
அம்-அப் (இ.வே.)
அம்முதல் = பொருத்துதல், ஒட்டுதல். அம் = நீர்.
“அந்தாழ் சடையார்"
அம்பரம் - அம்பர
உம்பர் =
=
உயர்ச்சி, மேலிடம், வானம், தேவருலகம்.
(வெங்கைக். 35)
உம்பர்-உம்பரம் - அம்பரம். "ஒருமருந்தாங் குருமருந்தை
உம்பரத்திற்
அம்பரம்."ஒருமருந்தாங்
கண்டேனே" (வே.சா.).
இதற்கு வடமொழியில் வேரில்லை.