மொழியதிகாரம்
81
-
யாடு ஆடு. ம. ஆடு, க.ஆடு,து.ஏடு.
மேடம் - மேஷ
மேடகம் - மேஷிகா
ஏழகம் -ஏலக ஏடகம்
-
டு ஏட
ஆடாதோடை
ஏடக
ஆட்டாருஷ
ஆடும் ஆவும் (மாடும்) தொடாத செடி என்று தமிழிற் சொற் பொருட் காரணம் காட்டுவர்.
ஆணவம்
—
ஆணவ
ஆண் - ஆணவம் = ஆண்மை, செருக்கு.
மானியர் வில்லியம்சு அகரமுதலி, ஆணவ என்னும் சொல்லை அணு என்பதினின்று திரித்து நுண்மை அல்லது மிகச் சிறுமை என்று மூலப்பொருள் கூறுகின்றது.
ஆணி-ஆணி (இ.வே.)
ஆழ்-ஆழி-ஆணி=ஆழ்ந்திறங்குவது, இருப்பாணி, மரவாணி, ஆணிபோல் கூரானது.
ஆணிக்குருத்து = அடிக்குருத்து, ஆணிவேர் = அடிவேர்.
ஆணி = அடிப்படை, நிலைக்களம், தாங்கல்.
66
'ஆணியா யுலகுக் கெல்லாம்'
ஆணிக்கொள்ளுதல் = ஊன்றிக் கொள்ளுதல்.
(கம்பரா. கடறாவு. 27)
ழ -ண, போலி ஒ.நோ: தழல்-தணல், நிழல்-நிணல்.
கால்டுவெலார் பொருந்துதல் என்னும் அடிப்படைப் பொருள் கொண்டு, அண் என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்டுவர்.
வடமொழியார் ஊசிமுனை, கழுமுனை, அச்சாணி, முகக் கோற்குச்சு, வீட்டுமூலை, எல்லை என்று வடமொழி யகரமுதலியிற் பொருள் கூறப்பட்டுள்ள அணி என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்ட விரும்புவர். அது ஆணி என்பதன் குறுக்கமே.
முனைப்பொருள் கொள்ளினும், அள் (கூர்மை) என்னும்
தென்சொல்லே ஆணிவேராம்.