உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியதிகாரம்

91


எங்கும் நிறைந்திருப்பது என்னும் கருத்தில், விஷ் என்பது விள் என்பதன் திரிபே. ஒ. நோ: உள்-உஷ், சுள்=சுஷ்.

வித்து-(விதை)-வீஜ, பீஜ (இ.வே.)

வித்து = 1. விதை. “சுரைவித்துப் போலுந்தம் பல்" (நாலடி.315). 2. விந்து (நாமதீப. 601).

3. காரணம். “நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்” (குறள். 138). ம., தெ., து. வித்து, க. பித்து.

மா வி. அ. “of doubtful origin" என்று குறித்திருத்தல் காண்க. ஆங்கிலர் 'மதுரையை' மெஜுரா என ஒலித்ததையும் நோக்குக. விந்து-பிந்து, விந்து (அ.வே.)

வித்து-விந்து = 1. வித்துப்போன்ற நீர்த்துளி 2. நீர்த்துளியாகிய கருநீர் (சுக்கிலம்). 3. உலகத்திற்கு வித்துப்போன்ற மாயை. “விந்துவின் மாயையாகிய" (சி.சி. 1:19).

வியம்-வியத் (இ.வே.)

விள்ளுதல்=விரிதல்.

விள்-(விய்)-வியம் = விரிவு.

"வியம்பெறு தோற்றமும்" (திருக்காளத். பு. ஞானோப. 62).

5

வடவர் வி-யத் என்று பிரித்துப் பிரிந்து போகை என்று பொருள் கூறி, யத் என்பதற்கு இ என்பது மூலமெனக் காட்டுவர். வ் 'இ' என்பது இயல் என்னும் தமிழ்ச்சொல்லின் முதனின யாகிய இய்யே என்று முன்னரே காட்டப்பெற்றது.

வ்

வியம்-வியன்-வியல் = அகலம். ஒ.நோ: திறம்-திறன்-திறல். “வியலென் கிளவி யகலப் பொருட்டே" (தொல். சொல். 354). வியன் = 1. அகலம், 2. பெருமை (திவா.) 3. வானம்.

66

"

"வியனிடை முழுவதும் கெட" (தேவா. 833:7).

விருது-விருத, பிருத, பிரத

வெல்-(வில்)-(விர்)-(வீறு = வெற்றி).

"வீறுபெற வோச்சி” (மதுரைக். 54).

(விர்)-விருது = 1. வெற்றிப்பட்டம்.

"தலம்புகழ் விருது" (திருவாலவா. 49:9).

2. வெற்றிக்கொடி. “கயல்விரு தனங்கன்" (தனிப்பாடல்).