மொழியதிகாரம்
95
பஜ் என்பது பகு என்பதன் திரிபென்று முன்னரே காட்டப் பெற்றது.
Beg என்னும் ஆங்கிலச் சொல்லின் தமிழ் மூலத்தை அறியாது, "perh. shortened fr. F. beguiner be a beghard or beguin, lay brother of mendicant order named f. Lambert Begue” என்று COD வரைந்திருப்பது பொருந்தாது. வெஃகா - வேகா g
வெஃகு = மிக விரும்பு. வெஃகு-வெஃகா=1. காஞ்சிபுரத்தருகில் ஓடும் ஆறு.
"சேயாற்றாலும் வெஃகாவினாலும்" (S II.II, 352: 115).
2. திருமால் திருப்பதிகளுள் ஒன்று (திவ். இயற். 3: 62). வெஞ்சணம்-வ்யஞ்சன
அண்ணுதல் = நெருங்குதல், கூடுதல், பொருந்துதல். அண்-ஆணம் = கூட்டு, நேயம், கறிக்கூட்டு, குழம்பு. வெந்த ஆணம்-வெஞ்சணம் ஆணம்.
=
வேக வைத்த கூட்டு. பச்சடி X
ஆணம் வெஞ்சணம் என்னும் இரு சொற்களும் பெரும்பாலும் கீழ் வகுப்பாரிடையே வழங்குகின்றன. ஆணம் என்னும் சொல்லே வெந்த குழம்பைத்தான் குறிக்கும். ஆயினும் பச்சடியினின்று தெளிவாய் வேறுபடுத்திக் காட்டற்கு வெந்த என்னும் அடை பெற்றது. “நண்டாணமுங் களியும் தின்றாலல்லோ தெரியும்” என்பது பழமொழி. இதில் ஆணம் என்பது சமைத்த குழம்பைக் குறித்தல்
காண்க.
வெஞ்சணம்-வெஞ்சனம்-வெஞ்சினம்.
"வெஞ்சினத்திற் பற்பட்டான் மீளாது" (காளமேகம்) "வெஞ்சினங்க ளென்றும் விரும்பாளே" (தனிப்பாடல்)
வடவர் காட்டும் வி+அஞ்ச் (vy-anj) என்னும் மூலத்திற்கும் வெஞ்சணத்திற்கும் எள்ளளவும் தொடர்பில்லை.
அஞ்ச் = எண்ணெய் தேய் அல்லது சாயம் பூசு, தோற்றுவி, வெளிப்படுத்திக் காட்டு (இ. வே.).
வ்யஞ்ச்
=
நன்றா யெண்ணெய் தடவு, தோற்றுவி, வெளிப்படுத்திக் காட்டு வே.).
அணிகலம், அடையாளம், மெய்யெழுத்து முதலிய பொருள் கட்கு வடவர் காட்டும் மூலம் பொருந்தும். ஆயின், வெஞ்சணத் திற்குப் பொருந்தாது. வடிவொப்புமைபற்றித் தென்சொல்லை வடசொல்லோடு தொடர்புபடுத்தியுள்ளமை வெளிப்படை.