உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

வடமொழி வரலாறு


செய், பண்(ணு), புரி முதலிய பல பிற ஒருபொருட் சொற்கள் தமிழில் இருப்பதனாலும், கரு என்பது வழக்கற்றுப் போனத னாலும். பின்னது வடசொல்லென வடசொல்லென மயங்கற் கிடந்தருகின்றது. தமிழ் வடமொழிக்கு முந்தியதென்றும் பெருஞ் சொல்வள மொழி யென்றும் அறியின், இம் மயக்கந் தெளிந்துவிடும். தமிழ் திரவிட மொழிகட்குரிய இல், மனை, வீடு முதலிய சொற்களை மட்டுமன்றி, ஆரிய மொழிகட்குரிய குடி என்னுஞ் சொல்லையும் தன்னகத்துக் கொண்டுள்ள தென்று, கால்டுவெலார் கூறியிருப்பதைக் கூர்ந்து நோக்குக.

(2) வியப்பை விளைப்பவை

எ-டு: சதரம். இது முன்னரே விளக்கப் பெற்றது. நித்தம்-நித்ய (இ.வே.)

=

நில் +தம் = நிற்றம் = நிலையானது. ஒ. நோ : கொல்-கொற்றம் பகையைக் கொன்று பெறும் வெற்றி. முடக்கொற்றான் கொன்றான். வெல்-வெற்றம் = வெற்றி.

=

முடங்

அதம், அத்தம். இதம், இத்தம், உதம், உத்தம் என்னும் சுட்டுச் சொற்கள், முதல் கெட்டு முதனிலையொடு புணர்ந்து தம், த்தம் என்னும் அளவில் நிற்பதை, என் தமிழ் வரலாறு என்னும் நூலிற் கண்டு தெளிக.

நிற்றம்-நித்தம். ஒ. நோ: குற்று-குத்து, முற்றகம்-முத்தகம்.

"நித்த மணாளர்

""

நித்தக்கட்டளை = நித்தியக் கட்டளை.

"நேரி னித்தமு மொட்டின னாகுமே

""

"இனைத்தென அறிந்த சினைமுதற் கிளவிக் கு வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்

""

(திருவாச. 17:3)

(மேருமந்.652)

(தொல்.516)

என்னும் நெறிமொழிப்படி, நித்தம் என்பது நித்தமும் என உம்மை யேற்றது.

நித்தம் -நிச்சம்.ஒ. நோ: அத்தன்-அச்சன், நத்து-நச்சு, மொத்தை-

மொச்சை.

"அச்சமு நாணு மடனுமுந் துறுத்த

நிச்சமும் பெண்பாற் குரிய என்ப'

நில்-நிற்றல் (நில்+தல் = நிலைப்பு.

(தொல்.1045)

"குணபத் திரன்றாள் நிற்றலும் வணங்கி” (சூடா.7: 76).

நிற்றல்-நித்தல் = என்று முண்மை, எந்நாளும் நிகழ்வு.