108
வடமொழி வரலாறு
சுட்டுகளெல்லாம் முதலில் நெடிலாகவே தோன்றிப் பின் குறுகின. குறில் நிலையில் வாய்ச்சைகை தெளிவாய்த் தோன்றாது. நெடில் நிலையிலும் முதற்காலத்திற்போல் அத்துணைத் தெளி வாயில்லை. ஒலியளவிலேயே பொருள் தெரிந்துவிடுவதாலும் சோம்பலாலும், இற்றைத் தமிழர் முதற்காலத் தமிழர்போல் வாய்ச்சைகையோடு சுட்டுகளை ஒலிப்பதில்லை. ஆயினும், இன்றும் பொருளளவிற் சுட்டொலிகள் கைச்சுட்டுப் போன்றே திட்டவட்டமா யுள்ளன. எக் கரணியத்தையிட்டும் முச்சுட்டுகளும் இடமாறிச் சுட்டுவதில்லை. இவ் வியல்பு ஆரிய மொழிகளில் இல்லை. இதனால் ஆரியமொழிச் சுட்டுச் சொற்கட்கெல்லாம் தமிழ்ச் சுட்டொலிகளே மூலமென்பது தேற்றம்.
சுட்டொலிகள் இன்றும் தமிழிலும் திரவிடத்திலும் குறிப்புப் பெயரெச்சமாகத் தமித்து வழங்குகின்றன.
எ-டு: ஆயிடை, இக்காலம் (தமிழ்)
ஈயாள், அவ்விடே (மலையாளம்)
ஊகார அல்லது உகரச் சுட்டு இன்று தாய்நாட்டுத் தமிழில் வழக்கற்றது; யாழ்ப்பாணத்தில் வழங்குவதாகச் சொல்லப்படு கின்றது.
இந்தியில் ஈகாரச் சுட்டு ஏகாரமாகவும் முன்மைச் சுட்டுச் சேய்மைச் சுட்டாகவும் திரிந்து வழங்குகின்றன.
எ-டு:
ஈ-ஏ = இது, இந்த
ஊ-ஓ = அது, அந்த; உதர் = அங்கு.
ஈகாரம் ஏகாரமாகத் திரிந்துள்ள நிலை வடமொழியி லுள்ளது. டமாறா வடமொழிச் சுட்டுச்சொற்கள்
சேய்மை
எ-டு : அதஸ் (adas) = அது, அங்கு,
அவ்வாறு.
ததா (tatha) = அப்படி
அஸவ் = அந்த
இடமாறிய வடமொழிச் சுட்டுச்சொற்கள்
அண்மை
இஹ = இங்கு, இவ்வுலகில்.
ஏத்தத் (etad) = இது,
இங்கு
சேய்மை
எ-டு
- இயத் = அவ்வளவு
அண்மை
அதஸ் (atas) = இங்கிருந்து
அதுநா (dh) =
இப்போது,
அயம் = இந்த