மொழியதிகாரம்
115
ஷஷ்
ஆறு என்னும் தமிழெண்ணுப் பெயர் மத (சமயநெறி) வகை பற்றித் தோன்றியது. சாஸன என்னும் வடசொற்கு மதம் என்னும் பொருளுண்டு. ஆதலால், சாஸ் = ஷஷ் என்று திரிந்திருக்கலாம். ஸப்தன்
ஏழ் என்னும் தமிழ் எண்ணுப்பெயர் எழுவும் இசைத்தொகை பற்றித் தோன்றியிருத்தலால், வடமொழிலும் அதைப் பின்பற்றி முதலெழுத்து மாறி ஸப்தன் என்னும் சொல் அமைந்திருக்கலாம். சப்த (b)-ஸப்தன். சப்த = ஒலி, ஓசை
பொருள் மாறும்போது எழுத்துகள் மாறுவதும் இயல்பே.
அஷ்ட்டன்
நவன்
எட்டு-(அட்டு)-அஷ்ட்ட-அஷ்ட்டன்.
எ-அ. ஒ.நோ: வெறுமை-வறுமை.
தாண்டு (ஒன்பது) என்னும் தமிழ் எண்ணுப்பெயர், உடம்பி லுள்ள ஒன்பான் தொளைபற்றித் தோன்றியதாகும்.
ஒள், கொள். சொள், தொள், நொள், பொள், மொள் என்னும் ஏழடிகளும் தொளைத்தலை அல்லது தொளையைக் குறிப் பனவே.
நாள்-நொள்ளல், நொள்ளை. நொள்-நெள்-நெள்ளல் - ஞெள்ளல் = பள்ளம், குழி, குழிந்த தெரு (புறம்.15)
நெள்-நெளி. நெளிமருங்கு = குழிந்த இடம் (புறம். 18). நொள்-நொள்வு-நொவு-(நவு)-நவி = வெட்டுக்கோடரி.
நவி-நவியம்.
ஒருகால் நவு-நவம்-நவன் என்றாகியிருக்கலாம்.
தசன் (d)
தசன = பல், கடி (கடிப்பு). தச = கடி.
தம்ஸ் = கடி, to bite.
தந்த்த = பல் (இ. வே.). தத் = பல் (இ. வே.)
=
பத்து என்னும் தமிழ் எண்ணுப்பெயர் பல் என்னும் சொல் லினின்று திரிந்தது. ஆயின், அது பல என்று பொருள்படுவது. வடவர் தவறாக அதைக் கடிக்கும் பல்லைக் குறிக்குஞ் சொல்லாகக் கருதி, தசன் என்று மொழிபெயர்த்துக் கொண்டனர் போலும்!