இலக்கண வதிகாரம்
131
(3) தமிழெழுத்தைப் பின்பற்றிய கிரந்தம் தேவநாகரிக்கு முற்பட்டமை.
(4) ஒலிவடிவு, மாத்திரை, சாரியை, வரிவடிவு, முறை முதலிய வற்றில் இயன்றவரை தமிழைப் பின்பற்றியிருத்தல்.
(5) ஒலிப்பெருக்கம்.
(6) கூட்டு மெய்கட்குத் தனி வடிவு கொண்டுள்ளமை.
ஐவர்க்கங்களும் கவர்க்கம் சவர்க்கம் (c) என முதன்மெய் யாலேயே பெயர்பெற்றிருப்பதால், அம் முதன்மெய்யின் திரிபே பிற்பட்ட மூன்றும் என்பது பெறப்படுதல் காண்க.
இனி, தமிழ்ப் பொலியா வொலிச்சொற்கள் திரவிடத்திற் பொலிவொலிச் சொற்களாகவும், ஆங்கிலப் பொலியாவொலிச் சொற்கள் இலத்தீன் கிரேக்கத்திற் பொலிவொலிச் சொற்களாகவும், திரிந்திருத்தலையும் நோக்கித் தெளிக.
இனி, வடமொழி யைவருக்க முதன்மெய்களும் தமிழ் வல்லினத்தின் வலித்த வடிவே யென்பதையும் கண்டறிக.
(7) மேலையாரியம்போற் குறுங்கணக்கு மட்டுங் கொண் டிராது தமிழ்போல் நெடுங்கணக்குங் கொண்டிருத்தல்.
(10) வடமொழி வண்ணமாலையின் ஒழுங்கின்மை
(7) ரு, ரூ, லு என்னும் உயிர்மெய்கள் உயிரினத்திற் சேர்க்கப் பட்டிருத்தல்.
(2) தேவநாகரியிற் சில எழுத்துகட்கு ஒன்றோடொன்றை மயக்கற்கேற்றவாறு வடிவமைந்திருத்தல்.
(3) மகரவொலியாகிய அனுஸ்வாரக் குறி மெல்லினப் பொது வாயிருத்தல்.
(11) வடமொழிக் குறுங்கணக்கு நூற்பாக்கள்
66
1. "அ
66
"
உ ண்', 2. "ருலுக்”, 3. “ஏஓங்”, 4."ஐஒளச்' (c), 5. “ஹயவரட்”(t), 6. “லண்”, 7. "ஞமஙணநம்”, 8. “JHA BHA ஞ்’ 9. “GHA DHA DHA ஷ்", 10. “ஜ BA GA DA DA ச்", 11. “KHA PHA CHA THA THA CA TA TA வ்”, 12. “KA PA ய்”, 13. “சஷஸர்”, 14. “ஹல்”.
இப்பதினால் நூற்பாக்கட்கும் மகேசுவர சூத்திரங்கள் அல்லது சிவசூத்திரங்கள் என்று பெயர். இவை பாணினீயத்தொடு பொதுவாகச் சேர்த்துக் கூறப்படினும், சிவபெருமானாற் செய்யப் பெற்றவை யென்றும், அவர் துடியைப் பதினான்முறை இயக்க இப் பதினால் ஒலித் தொகுதிகளும் தோன்றினவென்றும், வடமொழி