134
வடமொழி வரலாறு
அவை உத்தம புருஷ (தன்மை), மத்யம புருஷ (முன்னிலை), ப்ரதம புருஷ (படர்க்கை) எனப்படும்.
வேற்றுமை (விபக்தி)
விளி
கிரேக்க இலக்கணத்தில் எழுவாய் வேற்றுமை, வேற்றுமை, செய்பொருள் வேற்றுமை, கிழமை வேற்றுமை, கொடை வேற்றுமை என்னும் ஐவேற்றுமைகளும்; இலத்தீன் இலக்கணத்தில் எழுவாய் வேற்றுமை, கிழமைவேற்றுமை, கொடைவேற்றுமை, செய்பொருள் வேற்றுமை, விளிவேற்றுமை, நீக்கவேற்றுமை என்னும் அறுவேற்றுமைகளுமே கூறப்படுகின்றன. முதற்கால ஆங்கிலத்தில் எழுவாய், விளி, செய்பொருள், கிழமை, கொடை, கருவி என்னும் அறு வேற்றுமைகள் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. ஆயின் மேலையாரிய மொழி ஒன்றிலாவது எண் வேற்றுமை சொல்லப்படவில்லை.
வடமொழியிலோ தமிழிற்போல் எண்வேற்றுமை காட்டப் பெறுவதுடன், அவற்றின் வரிசையும் பெயரும் பொருளும் முற்றும் தமிழை ஒத்திருக்கின்றன.
வேற்றுமைப்பெயர்
வேற்றுமைப்பொருள்
தமிழ்
வடமொழி
தமிழ்
வடமொழி
முதல் வேற்றுமை ப்ரதமா விபக்தி
வினைமுதல்
கர்த்தா
இரண்டாம்
த்விதீயா
செய்பொருள் கர்ம(ம்)
மூன்றாம்
நான்காம்
ஐந்தாம் ஆறாம்
""
த்ருதீயா
""
வினைமுதல்,
கர்த்தா,கரணம்
கருவி
""
சதுர்த்தீ
22
கொடை
ஸம்பிரதானம்
பஞ்சமீ
22
நீக்கம்
உபாதானம்
""
ஷஷ்டீ
22
கிழமை
ஸம்பந்த(ம்)
ஏழாம்
""
ஸப்தமீ
22
இடம்
அதிகரணம்
எட்டாம்
22
(விளி)
ஸம்போதன" ப்ரதமா
விளி
ஸம்போதனம்.
இங்ஙனம் முற்றும் ஒத்திருப்பதால், வடமொழி வண்ண மாலை போன்றே வடமொழி வேற்றுமையமைப்பும் தமிழைத் தழுவியதென்பது வெள்ளிடைமலை. விபக்தி என்னும் சொல்லே விள்-பகு என்பதன் திரிபான வி-பஜ் என்னும் கூட்டுமுத னிலையினின்று திரிந்து வேறு பிரிப்பு என்று பொருள்படும் மொழிபெயர்ப்பாகும்.
தமிழில் எண்வேற்றுமையும் எண்வரிசையால்மட்டுமன்றி, எழுவாய், செய்பொருள், கருவி, கொடை, நீக்கம், கிழமை, இடம்,