உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியதிகாரம்

5


2. இசையலை.

66

'ஒண்டரங்க விசைபாடு மளியரசே

""


(தேவா. 87:1)

நோ: அரங்கு - அரங்கம். அலைதல் = அசைதல்.

அலை = அலையும் நீர்த்திரை.

அம்போதரங்கம் = கரைநோக்கிவரும் நீரலைபோல் வரவரச்

சிறுத்துவரும் கலிப்பாவுறுப்பு.

"அம்போ தரங்கம் அறுபதிற் றடித்தே.

(தொல்.1408)

தொல்காப்பியம் வழிநூலாதலால், ஆரிய வருகைக்கு இடைக்கழகக் காலத்திலேயே அம்போதரங்க

முற்பட்ட

வொத்தாழிசைக்கலி வழக்கிலிருந்திருத்தல் வேண்டும்.

வடவர் தரம்+க (ga) என்று பகுத்து, குறுக்கே செல்வது என்று மூலப் பொருளுரைப்பர். தரம் என்பதன் மூலம் த்ரூ. இது துருவு என்னும் தென்சொற் றிரிபு. க என்பது ஏ என்பதன் கான்முளை. ஏ- யா-ஜா-கா-க.

தருக்கம் - தர்க்க

தருக்குதல் = 1. செருக்குதல்.

66

"தன்னை வியந்து தருக்கலும்'

(திரிகடு.38)

2. மிகுத்துக் கூறுதல்.

"தன்னொடு மவளொடுந் தருக்கிய புணர்த்து

(தொல்.996)

3. போரூக்கங் கொள்ளுதல்.

வெம்போர்த் தருக்கினார் மைந்தர்"

(சீவக.1679)

4. தாக்குதல், இடித்தல்.

"தண்மருப்பால் வெண்பிண்டி சேரத் தருக்கி"

5. தகர்த்தல்.

(பதினொ. திரு வீங்கோய். 40)

""

"மரக்கல மியங்க வேண்டி...தருக்கிய விடத்து" (கம்பரா.மீட்சிப். 171) தருக்கு = 1. செருக்கு. 2. எதிர்க்கும் வலிமை.

"எதிர்செயுந் தருக்கி லாமையின்'

99

(கம்பரா. தாடகை. 40)

3. சொற்போர். “தருக்கினாற் சமண்செய்து" (திவ். பெரியதி. 21: 7).

தருக்கு-தருக்கம் = 1. சொற்போர்.

"பொருவரு தருக்கஞ் செய்ய”

2. தருக்க நூல்.

(கந்தபு. ததீசியுத். 157)