148
வடமொழி வரலாறு
(7)
(8)
(9)
குமரிக்கண்டப் பாண்டியனொருவன் வாரியில் வடிவே லெறிந்தது (கடல் சுவற வேல்விட்டது) போன்ற பண்டைத் தென்னாட்டுச் செய்தி, திருவிளையாடற் புராணத்திற்கு மூலமான வடமொழிப் புராணத்திற் சொல்லப்பட் டிருத்தல்.
பிராதிசாக்கியங்கள் கூறும் எழுத்தொலி யிலக்கணம் தமிழிலக்கணத்தை ஒத்திருத்தல்.
ஆரியர் பல்வேறு சிறுதெய்வங்களை வணங்கிக்கொண்டு பிள்ளைமை நிலையிலிருந்த வேதக்காலத்தில், திடுமென உயர்ந்த கடவுள் வழிபாட்டு மெய்ப்பொருள் நூல்கள் (உபநிஷத்துகள்) வடமொழியில் எழுந்தமை.
(10) பிற்காலத் தமிழருக்குத் தெரியாத தென்கடல் மகேந்திரத் தீவும் மலையும் வடநூல்களிற் சொல்லப்பட்டிருத்தல்.
பிராமணம்
வேதத்தின்பின், வேதப் பொருளை விளக்கும் பிராமணம் என்னும் உரைநடை நூல்கள் எழுந்தன. பிராமணனுக்குரியது பிராமணம். பிரமனை யறிந்தவன் பிராமணன். பிரமன் (ப்ரஹ்மன்) என்னும் சொல் பரமன் என்னும் தென்சொல்லின் திரிபு. மா. வி. அ. இதைப் ப்ருஹ் (b) என்னும் மூலத்தினின்று திரிக்கும். ப்ருஹ் என்பது பெருகு என்னும் தென்சொற் றிரிபென்பது முன்னரே விளக்கப் பெற்றது.
ஆரணியகமும் உபநிடத்தமும்
பிராமணத்தின்பின் ஆரணியகம் ஆரணியகம் (ஆரண்யக) என்னும் உபநிடதத் தோற்றுவாய் நூல்கள் தோன்றின. ஆரணியத்திலிருந்து ஆராய்ந்தது ஆரணியகம். ஆரணியம் காடு. ஆரணியம் என்னும் சொல் அரணம் என்னும் தென்சொற் றிரிபு.
அக்காலத்தில் நாடு சிறிதாகவும் காடு பெரிதாகவும் இருந்ததி னால், ஊரையடுத்தே காடு அல்லது சோலையிருந்தது. தமிழ திரவிட முனிவர் காட்டிலுறைவதைக் கண்ட வேதப் பிராமணர், தாமும் அவர்போல் நடித்தே, ஊரையடுத்த அல்லது தடிவழி (Trunk Road) மேலுள்ள சோலைகளிலும்
மக்கள்
மலையடிவாரங்களிலும், குடும்பத்துடன் வதிந்தனர்.
"சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை அந்தி யந்தண ரருங்கட னிறுக்கு
முத்தீ விளக்கிற் றுஞ்சும்
பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே
என்னும் புறப்பாட்டுப் பகுதியை நோக்குக.
வழங்கும்
(புறம்.2)