உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண வதிகாரம்

151


இலக்கிய வதிகாரம்


வேதாந்தம் வேதத்தின் பிற்பகுதியை ஆராய்வது: அதனால் உத்தரமீமாம்சை யெனப்படுவது. இதை இயற்றியவர் பாதராயண வியாசர்.

வைசேடிகம் பொருள்களை எழுவகையாகப் பகுக்கும் தருக்கநூல். இதை இயற்றியவர் கணாதர். இதற்கு மூலம் ஏரணம் எனப்படும் தமிழ்த் தருக்க நூல்.

நியாயம் பொருள்களைப் பதினாறுவகையாகப் பகுக்கும் தருக்க நூல். இதை இயற்றியவர் கௌதமர்.

சாங்கியம் 25 மெய்ப்பொருள்களைக் கூறும் பட்டாங்கு நூல். இதை இயற்றியவர் கபிலர். இதற்கு மூலம் தமிழே.

யோகம் துறவுக்குரிய எண்வகை ஓக நிலைகளைக் கூறும் நூல். இதை இயற்றியவர் பதஞ்சலியார். இவர் தென்னாட்டார். ஆதலால், இவர் நூலும் தமிழ்வழியதே.

4.புராணம்

புராணம் என்பது பழைமை. ஆதலால், பழஞ்செய்திகளைப் பற்றிக் கூறும் நூல் பொதுவாகப் புராணம் எனப்படும். மாபுராணம், பூதபுராணம் என்பன தென்னாடு வந்து தங்கிய ஆரியர் இயற்றிய பழந்தமிழ் இலக்கண நூல்கள்.

பிற்காலத்தில், (1) உலகப் படைப்பு, (2) உலக அழிவும் மறுதோற்றமும், (3) தெய்வங்களின் வழிமரபு, (4) மநுக்கள் ஆட்சி, (5) கதிரவ திங்கட்குல அரசர் வரலாறு ஆகிய ஐந்தையுங் கூறுவது புராணம் என இலக்கணம் வகுக்கப்பட்டது.

தரும சாஸ்திரங்கள் தமிழரை அடிமைப்படுத்தினவெனின், புராணங்கள் அவரை மடமைப்படுத்தின.

வடமொழிப் புராணங்கள் முன்னெழுந்தவை 18; பின்னெழுந் தவை 18. பின்னெழுந்தவை உபபுராணம் எனப்படும்.

பதினெண் புராணம்

பிரமம், பதுமம், விஷ்ணு, சிவம், பாகவதம், நாரதீயம், மார்க்கண்டேயம், ஆக்நேயம், பவிஷ்யம், பிரமவைவர்த்தம், லிங்கம், வராகம், ஸ்காந்தம், வாமனம், கூர்மம், மச்சம், கருடம், பிரமாண்டம். உபபுராணம்

சனற்குமாரம், நரசிங்கம், நந்தி, துருவாசம், சிவதருமம், நாரதீயம், கபிலம், மானவம், ஒளசனசம், வசிட்டலிங்கம், வருணம்,