உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

வடமொழி வரலாறு


காஞ்சியில் வாழ்ந்தவராகச் சொல்லப்படுகின்றார். இவர் காலம் கி.பி. 650-700. தமிழ்த் தண்டியலங்காரம் இயற்றியவரும் இவரேயாயின்,

66

'ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி

-

ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ்"

என்னும் எடுத்துக்காட்டுச் செய்யுளால், தமிழின் தொன்மை முன்மை தாய்மை தலைமையையும் வடமொழி தமிழுக்குப் பட்டுள்ள கடப்பாட்டின் அளவின்மையையும், தம் உள்ளான தமிழ்ப்பற்றினால் உலகிற்குணர்த்தியுள்ளார் என்னலாம்.

நாட்யம் (நடம்)

தமிழில் நடமும் நாடகத்துள் அடங்கும். வடமொழியில் நாடகம் வேறு; நடம் வேறு.

தோரா. கி.மு. 10,000 ஆண்டுகட்கு முன் தோன்றிய தலைக்கழக இலக்கணமே முத்தமிழாயிருந்தது.

பரதம் என்னும் பெயரால் முதன்முதல் தோன்றிய நாடக நூல் தமிழ்நூலே யென்று, அடியார்க்குநல்லார் கூறியிருத்தலைக் காண்க. மதிவாணர் நாடகத் தமிழ்நூல் கி.மு. சில நூற்றாண்டுகட்கு முற்பட் டது.

வடமொழிப் பரத சாஸ்திரம் இயற்றப்பட்ட காலம் கி. பி. 500.

சங்கீதம்

ஆசிரியர்

வடநூல்

சாரங்கதேவர்

சங்கீத ரத்னாகரம்

அகோபிலர்

சங்கீத பாரிஜாதம்

வேங்கடமகி

சதுர்தண்டி பிரகாசிகா

காலம்

கி.பி.1200

கி.பி.1600

கி.பி.1637

தலைக்கழக இடை க்கழகத் தமிழ் இசை நாடக நூல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன.

நாரதர் இயற்றிய பஞ்ச பாரதீயம், யாமளேந்திரர் இயற்றிய இந்திர காளியம், சிகண்டியார் இயற்றிய இசைநுணுக்கம் ஆகிய தமிழ் இசை நூல்கள் பாரதக் காலத்தையடுத்து, அதற்கு முன்னும் பின்னும் இயற்றப் பெற்றவையாகும்.

கி. பி. 12ஆம் நூற்றாண்டுவரை பாணருங் கூத்தருமே தமிழகத்தில் இன்னிசையும் நாடகமும் பயிற்றியும் வளர்த்தும் வந்தாரேனும், பிராமணர் கழகக் காலத்திலேயே முன்னோக்கொடு