160
வடமொழி வரலாறு
ஒழுக்கங் கற்பிப்பவன். ஆகவே, இவ் விரு சொல்லும் வெவ்வேறு. ஆசிரியன் கற்பிக்கும் நூலில் ஆளப்பெற்ற அகவல் என்னும் பாவும், தலைக்கழகத்திலேயே ஆசிரியம் எனப்பெற்றது.
"அகவல் என்ப தாசிரி யம்மே
""
(தொல்.1338)
உழுந்துவடைபோல் தட்டையாயிராது ஆமைபோல் மேல்வளைவா யிருப்பது ஆமைவடை. ஆமைத்தாலி, ஆமைப் பலகை, ஆமைப் பூட்டு என்பன இக் கரணியம்பற்றியே இப் பெயர் பெற்றன. ஆமை என்பதை ஆம எனத் திரித்து, நன்றாய் வேகாதது ஆமவடை எனப் பொருள் கூறுவது எத்துணை இழிவான குறும்புத்தனம்!
=
ஓர்தல் = பொருந்துதல். ஓர்-ஓரை = கூட்டம், மகளிர் கூட்டம், விண்மீன் கூட்டம் (இராசி). Constellation என்னும் ஆங்கிலச் சொல்லை நோக்குக. ஹோரா என்னும் கிரேக்கச் சொல் மணிக் காலத்தைக்(hour) குறிப்பது.
கொம்பு - கம்பு -கம்பம் = பெரு மரத்தூண். 'அம்' பெருமைப் பொருட் பின்னொட்டு. ஸதம்ப் = ஊன்று, நில், தாங்கு. ஸ்தம்ப்- ஸ்தம்ப = ஊன்றிய (மர அல்லது கல் அல்லது செங்கல்) தூண். ஸ்கம்ப என்பது தென்சொல்லின் அல்லது வடசொல்லின் திரிபாயிருத்தல் வேண்டும். மா. வி. அ "Prob, a mere phonetic variety of stambh” என்று குறித்திருத்தல் காண்க.
சட்டம் = எழுதப்பெற்ற ஓலை. சட்டம்-சட்டன் = ஓலைக் கணக்கன் என்னும் மாணவன். சட்டர் (மாணவர்) தலைவன் சட்ட நம்பி. சட்டநம்பிப்பிள்ளை- சட்டம்பிப்பிள்ளை - சட்டாம்பிள்ளை. சத்ர = குடை, குடைபோல் மாணவர்க்குக் காப்பான ஆசிரியன். இவ் விரு சொற்கும் என்ன தொடர்புண்டு?
சட்டம் = ஒழுங்கு. சட்டம்-சடம்-சடங்கு-ஒழுங்கான வினை. ஷடங்கம் = ஆறுறுப்பு. இரண்டிற்கும் வேறுபாடு வெளிப்படை.
=
=
சம்பு சம்பா, நெல். அளம் உப்பு. பண்டைக் காலத்தில் நெல்லும் உப்பும் சம்பளமாகக் கொடுக்கப்பட்டன. “உப்பிட்ட வரை உள்ளளவும் நினை" என்னும் பழமொழியையும், 'உப்புக்கு உழைக்காதவன்' என்னுந் தொடரையும் நோக்குக. Salary என்னும் ஆங்கிலச் சொல்லும் இதே பொருளதே. சம்பல என்னும் வடசொற்கு வழியுணவு, வழிப்போக்குப் பண்டம் என்பனவே பொருள். ஆதலால், தென்சொல்லே மூலமாதல் அறிக.
சுள் - (சுண்) - சுணை = முள். சுள்ளெனல் = குத்துதல். சுள்கள் ளென்று குத்துகிறது என்னும் வழக்கை நோக்குக. தன்மான வுணர்ச்சி