8
வடமொழி வரலாறு
தாத்தா-தாத்த
தாம்பு-தாமன் (d)
தாம்பணி-தாமணீ
தாம்பு+அணி தாம்பணி
-
=
மாடுகளை வரிசையாகப்
பிணைக்கும் கயிறு.
தாம்பு = 1. கயிறு (பிங்.). 2. தாம்பணிக் கயிறு.
"கன்றெல்லாந் தாம்பிற் பிணித்து"
தாம்பு + இசை =
=
தாப்பிசை = 1. ஊஞ்சல்.
(கலித். 111)
2. செய்யுட் சொல் முன்னும் பின்னுஞ் சென்று பொருள் கூடும் பொருள்கோள்.
தாமரை-தாமரஸ
தும் = செம். தும்-தும்பு-துப்பு = சிவப்பு, பவழம், அரக்கு. தும்பு-தும்பரம் = சிவப்பு, சிவப்பான அத்திப்பழம். தும்-(துமர்)-துவர் = சிவப்பு, பவழம், காவி, துவரை, துவர்ப்பு (காசுக் கட்டி). துவர்த்தல் = சிவத்தல், துவர்ப்புச் சுவையாதல். துவர்- துவரை = செம்பயறு, செப்புக்கோட்டை நகர். துவர்- துகிர் = பவழம்.
துமர்-தமர்-தாமரம் = செம்பு. தாமரை = செம்முளரி, முளரி.
தாமரஸ என்னும் வடசொல் வடிவைத் தாம+ரஸ என்று பகுத்துப் பகல் முளரி என்று பொருள் கூறுவர். ஆயின், தாம என்னுஞ் சொற்கு மூலமாகக் கொள்ளும் தம என்னுஞ் சொற்கோ, இருள் அல்லது இரவு என்றுதான் பொருள். இனி, இக் குழறுபடையைப் பெருக்கற்குத் தம் என்பதை அடி மூலமாகக் காட்டுவர். அதற்குத் திணறுதல் அல்லது திக்குமுக்காடுதல் என்பது பொருள். இங்ஙனம் வடவர் திணறித் திண்டாடுவதெல்லாம், வேண்டுமென்றே மெய்ம்மையைப் புறக்கணித்துப் பொய்ம்மையை மேற்கொள்வதன் விளைவே.
தாமரம்-தாம்ர
தும்பரம்-உதும்பர, உடும்பர (அ.வே.). தாவு-தாவ் (dh) - வே.
தாவுதல் = குதித்தல், தாண்டுதல், பாய்ந்தோடுதல்.