உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியதிகாரம்

13


ஏர்க்கால், துலாக்கட்டை.

துவா-துலாந்து = துலாக்கட்டை

துலா-துலாம்

=


நிறைகோல், துலாவோரை, துலாமாதம் (ஐப்பசி), 5வீசை கொண்ட நிறை, ஏற்றமரம், உத்தரக் கட்டை, துலாக் கட்டை, தூணுறுப்பு. துலாம் -துலான். ம. துலாம். துலாக்கோல், துலாக்கடைக் கூரை, கைத்துலா, ஆளேறுந் துலா, துலாப்பட்டை என்பன பெருவழக்குச் சொற்கள். ஐயவித்துலாம் = ஒரு மதிற்பொறி (சிலப். 15: 213).

துலா - துலை = நிறைகோல், துலாவோரை, 100 பல நிறை, ஒப்பு, "தோல்வி துலையல்லார் கண்ணுங் கொளல்” (குறள். 986).

வடவர் காட்டும் துல் என்னும் அடியே தமிழ்ச்சொற்கும் உரியதாம். ஆயின், மா. வி . அ. தூக்கற் கருத்தை முற்படக் கூறும். ஒப்பாதற் கருத்தே அடிப்படையாம்.

ஒ.நோ: ஒப்பு = நிறைகோல். ஒப்பராவுதல் = நிறைகோல் செய்தல்.

ஒப்பராவி = நிறைகோல் செய்பவன்.

குமரிக்கண்டத்தில் வழங்கிய துல் (நிறு) என்னும் வினை இக்

காலத்து வழக்கற்றது.

துவரம்-துவர, துபர

தும்-துமர்-துவர் = 1. சிவப்பு. “துவரிதழ்ச் செவ்வாய்" (சிலப். 6: 26). தெ. தொகரு.

2. பவழம் (திவா.). துவர்-துகிர். க. தொகர்.

"

3. காவி. “துவருறு கின்ற வாடை" (தேவா. 608:10).

4. துவரை. “துவர்ங்கோடு" (தொல். எழுத்து. 363, உரை).

5. துவர்ப்பு (காசுக்கட்டி).

6.துவர்ப்புச் சுவை.

"துவர்மருவப் புளிப்பேற்றி"

7. துவர்ப்புப்பொருள்.

"விரையொடு துவருஞ் சேர்த்தி"

துவர்த்தல் = 1.சிவப்பாதல்.

“துவர்த்த செவ்வாய்" (கம்பரா. நீர்விளை. 13).

2.துவர்ப்பாதல்.

துவர் -துவரம் = துவர்ப்பு (பிங்.)

(தைலவ.தைல)

(சீவக. 623)