16
வடமொழி வரலாறு
ஒ.நோ: உது-(உதழ்)-உதடு = வாயின் முன்னிருப்பது. உதழ்- இதழ்.
குது-தெ. கொத்த = புதிய. த. கோடி = புதுமை, புத்தாடை. ம.கோடி
புதுமை என்பது, ஒரு பொருள் தோன்றுவதின் அல்லது பயன் படுவதின் முன் நிலைமையே.
துது - தூது = ஓர் அரசனின் வருகையை அல்லது போர்ச் செய்தியை, மற்றோ ரரசனிடம் முன் சென்றறிவிப்பது. பிற்காலத்தில் செய்தி யறிவிப்பது என்று மட்டும் பொருள்பட்டது.
நுது-நுதல் = மண்டையின் முன்னுள்ள நெற்றி. நுதலுதல் = முன்சொல்லித் தொடங்குதல்.
புது இது வெளிப்படை.
மா. வி. அ. து (செல்) என்பதை மூலமாக ஐயுற்றுக் காட்டும். தூரி-தூலி, தூரிகை-தூலிகா
தூர் = குத்துச் செடியின் வேர்த்தொகுதி. தூர்-தூரி = தூர் போன்ற தூரிகை (painter's brush).
தூரி - தூரிகை.
தூளி-தூலி (dh)
துவைத்தல் = இடித்தல். துவை-துகை. துகைத்தல் = இடித்தல். துகை-துகள் = இடித்த தூள்.
துகள்-தூள்-தூளி-தூசி. தூளித்தல் = தூளாக்குதல்.
இச் சொல் மா. வி. அகரமுதலியில் இல்லை. ஆயின், சென்னைப் ப. க. க. அகரமுதலியில் வடசொல்லாகக் காட்டப்பட் டுளது. தூளித்தல் என்னும் வினைக்குத் தூளைப் பூசுதல் என்று பொருள் கொண்டுள்ளனர் வடவர். தூலன, உத்தூலன-தொ.பெ.(வ.) தேவன்-தேவ (இ.வே.)
தேய்தல் = உரசுதல். தேய்-தே= 1. (உரசிப் பற்றும்) நெருப்பு. 2. (நெருப்பாகிய) தெய்வம்.
"தேபூசை செய்யுஞ் சித்திர சாலை
3. (தெய்வம் போன்ற) தலைவன்.
""
(சிவரக. நைமிச.20)
தே-தீ = நெருப்பு, விளக்கு, சினம், தீமை, எரியகம் (நரகம்). தீமை
=
தீயின் தன்மை.ம.க.தீ.ஒ.நோ: தேன்-தேம்-தீம்.