28
வடமொழி வரலாறு
படி
பட் (th)
படி
—
படுதல் = ஒலித்தல். படு - படி = ஒலியெழ வாயித்தல் (வாசித்தல்). ஒ.நோ:ஓதை ஓசை. ஓதுதல் = படித்தல். படி பாடம்.
ப்ரதி
-
=
பள் - படு. படுதல் = விழுதல். படு படி. படிதல் = ஒன்றின்மேல் விழுதல், விழுந்து பதிதல், பதிந்து உருவம் அமைதல்.
நிலத்திற் பதிந்த பொருளின் வடிவம் நிலத்திலும், தாளிற் பதிந்த அச்சின் வடிவம் தாளிலும், அமைதல் காண்க.
படி = 1. உருவம். "மயிலனார்க்குப் படிவைத்து" (சீவக. 1156).
2. 21i04.
"நினையார வன்மைப் படியே"
(திவ். இயற். திருவிருத். 93)
படிந்த உருவம் படிந்த பொருளை ஒத்திருத்தலால், படி என்னும் சொல் ஒப்புமைக் கருத்தை உணர்த்திற்று.
அப்படி = அதுபோல்.
படியொருவ ரில்லாப் படியார் போலும்"
படி = ஒத்த வடிவம் (true copy).
"கிழித்த வோலை படி யோலை
"
(தேவா. 44:7)
(பெரியபு. தடுத்தாட். 56)
மூலமும் படியும் என்னும் வழக்கை நோக்குக.
-
-
படி படிவு படிவம். படி படிமை படிமம்.
-
-
படிமை
-
படிவடி (கொச்சை). படிவு வடிவு.படிவம் - வடிவம்.
ப்ரதிமா
-
படி படிமை = 1. வடிவம்.
"கட்டளைப் படிமையிற் படியாது" (சீவக. 2752).
2. பாவை. 3. வழிபடு தெய்வ வுருவம். 4. நோன்பு, தவம். "பல்புகழ் நிறுத்த படிமை யோனே" (தொல். சிறப்புப்.). ப்ரதிமா-பதுமை-பொம்மை.
பண்டாரம்
பண்
பாண்டார (bh)
பண்டு - பண்டம் = பண்ணப்பட்ட பொருள்.