உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

வடமொழி வரலாறு


2. பெண். "ஆயமக ணீயாயின்" (கலித். 107:19), 3. மனைவி. "மனக்கினி யாற்கு நீமக ளாயதூஉம்" (மணிமே.21:30).

வடவர் காட்டும் மஹ் என்னும் மூலம் மகிழ், மகிழ்வி என்று பொருள்படும்.

மகுடம் - மகுட (t ) முகுட (t )

முகம் - முகடு = மூக்குப்போன்ற கூரையுச்சி.

முகடு = 1.உச்சி.

முகடுதுமித் தடுக்கிய பழம்பல் லுணவின்

(பெரும்பாண்.246)

2. வீட்டின் உச்சி. 3. வானமுகடு. "வானெடு முகட்டை யுற்றனன்” (கம்பரா. மருத்து. 30). 4. தலை. "முகடூர் மயிர்கடிந்த செய்கை யாரும்" (தேவா. 936 : 10). 5. உயர்வு. "முனிமை முகடாய் மூவா முதல்வன்" (சீவக. 1609).

முகடு - (முகடம்) - மகுடம் மகுடம் = உச்சி மயிர்முடி, மணிமுடி, தேர்முடி, ஒருபொருட் பலபாட்டுப் பொது முடிவு.

-

முகுடம் மகுடம்

னி, முகிழ் - முகிழம் முகுளம் மொட்டுப்போற் கூம்பிய மணிமுடி என்றுமாம்.

"மாமொட் டொடிந்து..மான்றேர் சிதைய" (பாரத. நான்கா. நாள். 24).

பேரா. பரோ. இச் சொல்லைத் தென்சொல்லென்றே கூறுதல் காண்க. (The Sanskrit Language, p. 381).

முகுடம் பிறை வடிவினதென்றும், கிரீடம் குவிந்ததென்றும், மெளலி மும்முனையதென்றும் மா. வி. அ. கூறும்.

மங்கலம் - மங்கல

-

மங்கு - மங்கள் - மஞ்சல் மங்கலான நிறம். அந்நிறக் கிழங்கு (மஞ்சள்). மஞ்சல் - மஞ்சள்.

ஒ.நோ : பொங்கு - பொஞ்சு, இங்கே - இஞ்சே (கொச்சை).

-

=

மங்கல் மங்கலம் = 1. மஞ்சளால் அல்லது மஞ்சள் நீரால் குறிக்கப்பெறும் நன்னிலைமை.

"மங்கல மகளிரொடு மாலை சூட்டி" (புறம்.332).

2. திருமணம்.”மங்கல வாழ்த்துப் பாடல்" (சிலப்.). 3. திருமணத்தாலி.

'மற்றைநல் லணிகள் காணுன் மங்கலங் காத்த மன்னோ

"

(கம்பரா. உருக்காட்டு. 35)