உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியதிகாரம்

55


மல்-மல்லன் = மற்போர் செய்வோன்.

"மறத்தொடு மல்லர் மறங்கடந்த" (பு. வெ. 9 : 4).

மல்-மல்லம் = மற்போர். மல் = வலிமை. மல்லல் = வலிமை. முல்-மொல்-மொலு. மொலுமொலு - மொதுமொது.

மொலு மொலு, மொலோர் என்பன மொய்த்தல் அல்லது திரளுதற் குறிப்புகள். மொல்-(மொள்)-மொய் = நெருக்கம், கூட்டம், திணுக்கம், பெருமை, வலிமை, போர்.

மல்-மல்கு. மல்குதல் = கூடுதல், மிகுதல், நிறைதல். மல் = கூடிச் செய்யும் போர்.

மல்-மலை. மலைதல் = பொருதல்.

வடவர் மல் (mal, mall = வைத்திரு, கொண்டிரு, உடமை கொள்) என்னுஞ் சொல்லை மூலமாகக் காட்டுவர்.

மல்லி-மல்லி, மல்லிகை-மல்லிகா

மலையம்-மலய

மலை-மலையம் = பொதியமலை.

"ஓங்குயர் மலையத் தருந்தவன் உரைப்ப"(மணிமே. 1 : 3).

'அம்' பெருமைப்பொருட் பின்னொட்டு. ஐகாரம் அகர மானது சமற்கிருத வடிவைப் பின்பற்றி.ஒ.நோ: நிலையம்- நிலய, வளையம்-வலய.

மனம்-மன (இ.வே.)

66

உன்னுதல் = 1. கருதுதல். 2. ஊழ்குதல் (தியானித்தல்). “உன்னலே தியானம்" (கந்தபு. திருநகர. 81).

ம. உன்னு, க. உன்னிசு.

உன் - உன்னம் = 1. கருத்து (திவா.). 2. ஊழ்கம் (தியானம்). "அகத்தியான் பள்ளியை யுன்னஞ் செய்த" (தேவா. 847 : 2). 3. மனம் (திவா.). ம. உன்னம்.

உன்-உன்னல் = 1. கருதுகை (பிங்.)

66

“உன்னல் காலே ஊன்றல் அரையே

முறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே” (தொல். உரைநூற்பா).

2. LOGOLD (LIB.).

உன்னுதல்-முன்னுதல் = முற்படக் கருதுதல், கருதுதல். "வேறுபுல முன்னிய விரகறி பொருந்

(பொருந.3)