62
வடமொழி வரலாறு
"மாமான் மகளே" (திவ். திருப்பா. 9).
மாமான்-மாமன். ம. மாமன், தெ. மாம.
66
‘மாமனு மருகனும் போலு மன்பின" (சீவக. 43).
சில குலத்திலும் குடும்பத்திலும் ஒருத்தி தன் அம்மானை மணந்துகொள்ளும் வழக்கமிருப்பதால், கணவனை மாமன் என்றழைக்கும் நிலைமையும் நேர்ந்தது. ஒருவன் தன் அக்கை அல்லது தங்கை மகளை மணப்பதும் இதுவே.
மாமன்-மாமி = 1. அம்மான் மனைவி.
"அன்புடைய மாமனு மாமியுநீ" (தேவா. 1228: 1). 2. அத்தை. 3. மனைவி அல்லது கணவன் தாய். "சிறக்கு மாமியர் மூவர்க்கும்" (கம்பரா. சூளா. 33). அம்மான் மாமி-அம்மாமி (ஆரியப் பார்ப்பன வழக்கு) = 1. அம்மான் மனைவி. 2 . மாமன் மனைவி.
=
“அம்மாமி தன்வீவுங் கேட்டாயோ தோழி" (சிலப். 29: தேவந்தி யரற்று).
வடமொழியில் மாமி என்னும் பெண்பால் வடிவில்லை.
மாம் (மாமக) என்னும் ஆண்பாற் சொற்கு மம (எனது) என்னும் தன்மை யொருமைப் பெயரின் 6ஆம் வேற்றுமையடியை மூலமாகக் காட்டுவர். மாம = எனக்குரியவன்.
“māmā, m. (fr. mama, lit. 'belonging to mine') dear friend, uncle (only in
voc.sg. as a term of affection among animals in fables), Pancat” வி.அ. (ப. 810) கூறுதல் காண்க.
மாயை - மாயா ( வே.)
மாள் -மாய்
I LDIT.
மாய்தல் = மறைதல், மறந்துபோதல், இறத்தல், அழிதல். மாய்-மாயம் = 1. திடுமறைவு. 2. மயக்கம். 3. நிலையின்மை. “என்மாய வாக்கை யிதனுட் புக்கு" (திவ்.திருவாய் 10: 7: 3). 4.பொய்."வந்த கிழவனை மாயஞ் செப்பி" (தொல். பொருள்.114). 5. பாசாங்கு. 6. ஏமாற்று (வஞ்சனை).
"மாய மகளிர் முயக்கு" (குறள். 918).
7. பொய்த் தோற்றம் (மாயை).
"வருந்திட மாயஞ் செய்து நிகும்பலை மருங்கு புக்கான்” (கம்பரா. மாயா சீதை. 96). 8. மாயக்கலை.