உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

வடமொழி வரலாறு


தொடைப் பொருளில் கலத்தற் கருத்தும், அந்திவேளைப் பொருளில் கலத்தற் கருத்தொடு கலக்கக் கருத்தும் அமைந்துள்ளன என அறிக.

கண் தெரியாது கலங்குவதும் இராத்தங்க இடமின்றிக் கலங்குவதும் காதலர் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்து கலங்குவதும், மாலைக்கால மயக்க வகைகளாம். இதனையே மருண்மாலை என்னும் இலக்கிய வழக்கு உணர்த்தும்.

வடமொழியில் இச் சொற்கு மூலமில்லை.

மாவலி -மஹாபலி (b)

மாவலி = பெரு வலிமையுள்ள ஒரு பழஞ் சேரவேந்தன். "மூரி வார்சிலை மாவலி" (மணிமே. 19 : 54). ஒ.நோ: உறுவலி = மிகுந்த வலிமையுள்ளோன். "உறுவலி தாக்கி னானே" (சீவக. 2282).

மதவலி (மீமிசைச் சொல் = மிக வலிமையுள்ளோன். "வலம்புரி பொறித்த வண்கை மதவலி" (சீவக. 204).

மாவலி வாணன் = மாவலி வழிவந்த ஒரு சிற்றரச ஆள்குடியான். "வையமொரு கோலாற் புரந்தருள் மாவலிவாணன்" (S.II. IV, 98)

மாளிகை-மாலிகா

மல் -மால். மாலுதல் = மாட்சிப்படுதல்.

“மான்றபூண் முலையினாள்" (காஞ்சிப்பு. திருக்கண். 194).

மால் =

பெருமை (பிங்.). மால்-மாள்-மாண்-மாண்பு, மாட்சி. மாள்-மாளிகை = 1. மாடமுள்ள பெருவீடு (பிங்.).

"மறையவர்க்கு மாளிகைகள் பலசமைத்தார்" (பெரியபு. கோச்செங்.16). 2. மாடம் போன்ற கோயில்.

"

"உத்தர கோசமங்கை...மாளிகை பாடி" (திருவாச. 16: 3).

வடவர் மாலிமா என்னும் சொல்லை மாலா என்பதனொடு தொடர்புபடுத்தி, மேன்மாடியுள்ள வீடு என்று பொருளுரைப்பர். மலரடுக்குப் போன்ற மாடியடுக்கு என்பது அவர் கருத்துப் போலும்! "a white-washed upper-storied house” என்னும் பொருளை மா வி. அ. எங்ஙன் பெற்றதோ, அறிகிலம்.

மானம்-மான

=

பெருமை (greatness)

மல்-மல்லை = பெருமை.