உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 12.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

வடமொழி வரலாறு


கண்டைமீன் வகைகளுள் வெள்ளிபோல் மின்னுவது

வெளிச்சி.

பெண்ணின் கண்ணிற்கு வடிவால் உவமை கூறப்படுவது கெண்டை மீனே. கயல் என்பது கெண்டையின் மறுபெயர். மீன்வகைகளுள் மிக மென்மையானது கெண்டையாதலின் அப் பெயர் பெற்றது.

"கயவென் கிளவி மென்மையும் செய்யும்

(தொல்.805)

பொதுவாக வரையப் பெறுவதும் பாண்டியன் கொடியின் உருவமும் எண்மங்கலங்களுள் ஒன்றும் கெண்டைமீனே. ஏரி குள நீருட் பெருவாரியாய் வாழ்வதும் அம் மீனே.

மீன் -மீனம் (திவா.). 'அம்' பெருமைப்பொருட் பின்னொட்டு. மீன் என்னும் வடிவம் வடமொழியிலில்லை. வடவர் காட்டும் மூலம் மீ'=குறை, சிறு, அழி; வழிதப்பு, வழிவிலகு; மீறு, கலக்கடி, மாற்று. திரிவது (சஞ்சரிப்பது) என்று மூலப்பொருள் கூறுவர். சிறுத்தற் பொருளில் மீ என்பது மின் (min) என்னும் இலத்தீன் சொல்லின் திரிபாகத் தெரிகின்றது.

முகம்-முக (kh) - (இ.வே.)

வை

முகம்=முன்பக்கம், தலையின் முன்பக்கம், முகத்தின் முன் நீண்டுள்ள மூக்கு, நுனி, தொடக்கம், முன்பு, முதன்மை. யெல்லாம் முன்மைக் கருத்தைப் பொதுவாகக் கொண்டவை.

இப் பொருள்கட்கெல்லாம் அடிப்படை தோன்றற் கருத்தே. இயல்பான தோற்றமும் இயக்கமும் முன்னோக்கியே நிகழ்வதால், ஒரு பொருள் தோன்றும்போது அதன் முன்புறமே தெரியும்.

முகஞ்செய்தல் = 1. தோன்றுதல்.

"முகஞ்செய் காரிகை" (பெருங். உஞ்சைக். 35 : 49).

2. முன்னாதல்.

"தோற்றினான் முகஞ்செய் கோலம்" (சீவக. 675). 3. நோக்குதல்.

"முன்னினான் வடதிசை முகஞ்செய்து" (சீவக.1408) முகம் = 1. தோற்றம். “சுளிமுகக் களிறன்னான்" (சீவக. 298). 2. நோக்கு. "புகுமுகம் புரிதல்" (தொல். பொருள். 261).

முகு தோன்றுதல்.

=

முகிழ். முகிழ்தல்

=

அரும்புதல். முகிழ்த்தல்

=

"மூவகை யுலகு முகிழ்த்தன முறையே" (ஐங். கடவுள்).