மொழியதிகாரம்
81
"வரிவனப் புற்ற வல்லிப் பாவை" (புறம். 33).
வரித்தல் = 1. எழுதுதல்.
'வள்ளுகிர் வரித்த சாந்தின் வனமுலை" (சீவக. 2532).
2. சித்திரமெழுதுதல், பூசுதல். 3. கோலஞ் செய்தல்.
66
‘அணிமலர் துறைதொறும் வரிக்கும்" (ஐங். 117).
வரி = 1. வளைகோடு (வரிப்புலி = வேங்கை). 2 கோடு. 3. எழுத்து (அரிவரி = அரியென்று தொடங்கும் நெடுங்கணக்கு). 4. இசைப்பாட்டு. "வரிநவில் கொள்கை” (சிலப். 13:38).
5. நிறம். "வரியணிசுடர் வான்பொய்கை” (பட்டினப். 38). 6.அழகு. "வரிவளை”(பு.வெ. 11:12).
தெ. வரி, க. பரெ. (b), ம. வரெ.
வரி + அணம் நிறம்பற்றிய குலம்.
=
வரணம் = எழுத்து, பூச்சு, நிறம், வகை, அழகு,
வரணி-வர்ண்
வரணம்-வரணி. வரணித்தல்
=
புனைந்துரைத்தல்.
ரு
வரணம், வரணி என்னும் இரு சொல்லும், வடசொல் வடிவைப் பின்பற்றி வருண, வருணி எனத் தமிழில் வழுப்பட எழுதப்பட்டுள்ளன. பாண்டிநாட்டிற் குலம் வினவும்போது "என்ன வரணம்?” என்றே இன்றும் ரகர வடிவில் நாட்டுப்புறத்தில் வழங்குதல் காண்க.
வண்ணம், வரணம் என்னும் ரு சொல்லும் ஒரே மூலத்தினின்று தோன்றியவையே. ஆயின், முன்னது அடிப்படை மூலமாகிய வள் என்பதினின்றும், பின்னது மேற்படை மூலமாகிய வரி என்பதினின்றும் திரிந்தவையாகும்.
வள்-வண்-வண்ணம்-வண்ணி-வண்ணனை. (வள்-வர்)-வரி-வரணம்-வரணி-வரணனை.
ஒ.நோ; திள்-திண்-திண்ணை (அடிப்படை மூலம்). (திள்-திர்-) திரள்-திரளை-திரணை (மேற்படை மூலம்).
ம்
திண்ணை, திரணை என்னும் இரண்டும் ஒரே மூலத்தி னின்றும் தோன்றிய ருபொருட் சொற்களே. இவை யிரண்டும் இன்றும் நெல்லைநாட்டு உலக வழக்காம்.
அங்ஙனமே வண்ணம், வரணம் என்பனவும்.