88
வடமொழி வரலாறு
வடவர் விக்ஷ்' என்பதை மூலமாகக் காட்டி, அதன் புணர்ப்புத் திரிபாக விட், விண் என இரு வடிவுகளைக் குறிப்பர்.
விள்-விக்ஷ் (மலம்). ஒ.நோ: உள்-உஷ், சுள்-சுஷ்.
விள்-விண். பிள்-விள். பிள்-(பிய்)-பீ. பிள்-பீள்-பீளை கண்மலம்.
விடி-வ்யுஷ்டி (இ.வே.)
வெள்-வெளு வெளுத்தல் = 1. வெண்மையாதல். 2. விடிதல். கிழக்கு வெளுத்தது (உ.வ.).
=
வெள்-வெளி. வெளித்தல் = 1. வெண்ணிறங் கொள்ளுதல்.
2.விடிதல்.
வெளி-வெடிஒ.நோ: வெளி-வெடி
களிறு-கடிறு, கெளிறு-கெடிறு.
=
திறந்தவெளி (பிங்.)
வெடிதல் = விடிதல். “என்றூழ் வெடியாத போதிற் கொய்தான்"
(செவ்வந்திப்பு, உறையூரழி. 47).
வெடி = விடிவெள்ளி (பிங்.). வெடியல்
விடிவு.
=
விடியல். வெடிவு
=
வெடி-விடி. விடிதல் = கதிரொளி தோன்றுதல்.
"வெஞ்சுடர் தோன்றி விடிந்ததை யன்றே” (சீவக. 219). விடி = விடிகாலை.
“விடிபக லிரவென் றறிவரி தாய" (திவ். பெரிய. 4 : 10 : 8). விடி-விடியல். "வைகுறு விடியல் ” (தொல். பொருள். 8). “விடியல் வைகறை யிடூஉ மூர" (அகம். 196). விடி-விடிவு-விடிவை.
"விடிவை சங்கொலிக்கும்" (திவ். திருவாய். 6 : 1 : 9).
மா. வி. அ. அல்லது வடவர் காட்டும் மூலம் வருமாறு:
வ்யுஷ்' (ப்யுஷ்) = 1. எரி. 2. பிரி. 3. தள், வெளிவிடு.
=
வி+வஸ்' (ஒளிர்) = வ்யுஸ் (vy-us) = விடியல் (அ. வே.) = வ்யுஷி
(7ஆம் வேற்)-இ.வே.).
வ்யுஷித (7ஆம் வேற்.) = விடியல்.
வ்யுஷ்ட = விடிந்து. வ்யுஷ்டி = விடியல் (இ.வே.).
இதை நோக்கும்போது, விடி என்னும் சொல்லையே வ்யுஷ் என்று திரித்து அதற்கேற்ப இங்ஙனம் தித்திருக்குச் செய்திருக்கின் றனர் என்பது தெரிய வருகின்றது.
உள் (ஒள்) - உஷ் என்பது, முன்னரே உண்ணம் (உஷ்ண) என்னும் சொல்லின்கீழ்க் காட்டப்பெற்றது.