உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

மேல் - மேன்மை. மேல் - மேன் - மேன்படு - மேம்படு - மேம்பாடு.

மேலோன் - மேனோன். மேலன் - மேனன். மேல - மேன.

மேல் மேன் மேனி. உடம்பின் மேற்புறம், உடம்பு. திருமேனி

இறையுருவம், தூயோருடம்பு.

மேல் மேற்கு மேக்கு

=

=

மலையாலுயர்ந்த திசை அல்லது

கதிரவன் செலவின் பிற்பகுதிக்குரிய திசை.

மேல் மேலை - மேரை மதித்தளிக்கும் மானியம்.

மேல்

வேல்

=

மேலெல்லை, எல்லை, அளவு. மதிப்பு,

எல்லைக்குட்பட்ட நிலம், ஒரு நிலஅளவு.

வேலி - வேலிகம்

வேல் ஆயுதம்.

வேலி

=

எல்லை, எல்லையிலிடும் முள்,

=

வேலியில் வைக்கப்படும் கற்றாழை.

வேலியில் இடப்படும் முண்மரம், முட்போற் குத்தும்

வேல் வேலை

=

எல்லை, நிலவெல்லையான கடல், கால வெல்லை,

காலம்.

வேலை வேளை = காலம்.

இங்குக் காட்டப்பட்ட இகர எகரவடிச் சொற்கள் பலவற்றிற்கு மூலமான உகர வடிச்சொற்கள் இறந்துபட்டன.

(10) தன்மைப்பெயர்

மாந்தனுக்கு இயல்பாக நான் என்னும் அகங்கார மிருத்தலாலும், அவன் தன்னலத்தையே முன்னலமாகப் பேணுதலாலும், உயர்ச்சி குறிக்கும் ஏகாரத்தி னடியாகத் தன்மைப் பெயரை அமைத்துக் கொண்டான் முன்னைத் தமிழன் என்க.

ஒருமை

பன்மை

ஏம் (முதல் நிலை)

யாம் (2ஆம் நிலை)

ஏன்

யான்

நான்

நாம் (3ஆம் நிலை)

வந்தேன் வந்தேம் என்னும் தன்மை வினைகளில், ஏன் ஏம் என்னும் தன்மைப் பெயர்கள் இன்றும் விகுதியா- வழங்குதல் காண்க. இவை பிற்காலத்தில் பின்வருமாறு திரிந்தன.