உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




126

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

கரண்டு - கரண்டி (trowel).

சுறண்டு - சுறண்டி. சுரண்டு - சுரண்டி.

சுறு - சொறி. சொறிதல் = நகத்தால் வறண்டுதல்.

(புறண்டு) - பறண்டு - பிறாண்டு.

பறண்டு -பறட்டு (ஒ.கு.)

பறண்டு - வறண்டு. வறண்டு - வறண்டி.

வறண்டு-வறட்டு (ஒ.கு)

கறட்டுக்கறட்டென்று புல்லைச் செதுக்குகிறான். பறட்டுப் பறட் டென்று சொறிகிறான், வறட்டுவறட்டென்று பானையைச் சுறண்டு கிறான் என்பன வழக்கு.

vi. சுரசுரப்பு

செறிந்த பல நுண்முட்கள் ஒருங்கே குத்துவது சுரசுரத்தல்.

குர்-(குர)-கர-கரகர-கரகரப்பு

உணர்ச்சி.

=

தொண்டையில் சுரசுரத்தல் போன்ற

கர-கார்-காறு. காறுதல் = கரகரத்தல்.

கர-கரண்-கரணை = சுரசுரப்பான கிழங்கு.

கரண்-கரடு-கரடா = சுரசுரப்பான தாள்.

கரடு = கரடான திரடு.

கரடு-கரட்டை = கரட்டுத்தோலுள்ள ஓணான்.

சுர்-சுர-சுரசுர-சுரசுரப்பு.

சூர்-சர்-சரு-சருசரு-சருச்சரை.

சர்-சரள் = கரட்டுமண்.

சுர்-(சுரடு) - (சுரட்டை) - சிரட்டை = கரடான கொட்டாங்கச்சி.

சுரடு-சுறடு-சுறட்டைத்தலை = வறண்ட தலை.

சுற-சொறி-சொறியன் = சொறித்தவளை.

(புர்)-பர்பர-பரபர (உடம்பை அரித்தற் குறிப்பு).

பர-பரடு-பரட்டை-பறட்டை=சீவாத் தலை.

பர-(பார்)-பாறு. பாறுமயிர்=பறட்டை முடி.