உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முன்னுரை

(7) குமரிக்கண்டம் வெப்பமண்டிலத்தைச் சேர்ந்திருந்தமை

3

உடல் முழுதும் அடர்ந்த மயிர் போர்த்துக் குரங்கு நிலையி லிருந்த மாந்தற்போலி, மயிருதிர்ந்து மாந்தனாதற்கு வெப்ப மண் டிலமே ஏற்றதாம்.

மேலும், ஞாலத்தின் முதுபழங்காலத்தில் வடக்கிலும் தெற்கிலும் சமதட்பமண்டலத்தில் உறைபனியூழிகள் (Glacial periods) மாறி மாறி நிகழ்ந்ததாக நிலநூல் வல்லார் கூறுவதால், அதனாலும், நண்ணிலக் கோட்டைச் சார்ந்த வெப்பமண்டிலமே மாந்தன் பிறந்தகமாகக்

கொள்ளப்படத்தக்கதாம்.

(8) குமரிக்கண்டத்தின் வளச்சிறப்பு

குரங்கினங்களும் அநாகரிக மாந்தனும் இயற்கையுணவை யுண்டு வாழ்தற்குப் போதிய வளச்சிறப்பையுடையது தென்ஞாலமே! அதிலும் குமரிக்கண்டமே.

உயிர்நூலும் மாந்தனூலும்பற்றிய பல்வேறு சான்றுகளைக் கொண்டு, குமரிக்கண்டத்தில் மடகாசுக்கருக்கு அண்ணிய இடமே மாந்தன் பிறந்தகமா யிருந்திருத்தல் கூடுமென ஊகிக்கின்றார் உயிர்நூல் வல்லாரான எக்கேல் (Haeckel) பேராசிரியர்.

மக்கள் ஞாலத்திற் பரவியவகை

குமரிக்கண்டத்தில் தோன்றிய மாந்தனினம், ஞாலத்திற் பல விடத்தும் பரவியமைக்குக் காரணங்களாவன:

(1) இனப்பெருக்கம்

மாந்தவினம் தோன்றியதிலிருந்து அது மேன்மேலும் பெருகி வருவதால், மக்கள் ஞாலமெங்கும் பரவியுள்ளமைக்கு முதற்காரணம் இனப்பெருக்கமே. ஒரேயிடத்தில் மிகப் பலர் கூடிவாழும்போது, இட வசதியும் உணவுவசதியும் குறைகின்றன. அவற்றை முற்றும் பெறு தற்குச் சிலர் பிரிந்துவாழ நேர்கின்றது.

(2) இயற்கை விளைவு போதாமை

மாந்தன் அநாகரிக நிலையிலிருந்தபோது இயற்கை விளைவையே முற்றுஞ் சார்ந்திருந்தான். ஒவ்வொரு விளையுட்கும் ஒவ்வொரு காலமும் இடமு மு. முண்மையால், பழங்கால மாந்தர் பழுமரந் தேரும்