உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

இத்தகைய வொலிகள் பல, ஆப்பிரிக்க மொழிகளும் ஆத்தி ரேலிய மொழிகளும் போன்ற திருந்தா மொழிகளில், சொல்லாக வழங்குகின்றன.

ஆங்கிலத்திலுள்ள mew, bow vow, pipe, tom tom என்னுஞ் சொற்கள் இத்தகையனவே.

தமிழிலும், காக்கை (காக்கா), ஞள்ளை (ஞள்), துந்துமி - தும்தும் துப்துப் – துந்துபி (வ.), சடபுடா முதலிய சொற்கள் இம்முறை யிலேயே அமைந்துள்ளன.

இத்தகைய

வொலிகளெல்லாம்

உண்மையில் ஒப்பொலிகளே யாயினும், குழவி வாயினின்று வருவன என்னும் சிறப்புப்பற்றி வேறு பிரித்துக் கூறப்பட்டன என்க. இவற்றின் தொகுதியைக் குழவிமொழி child language) என்பர்.

(2) தாயொலிகள்

குழவியைத் தொட்டிலிலிட்டுத் தா- லாலாவென் றொலித் தாட்டுதல் லாலாட்டு. ஆங்கிலரும் இதை lullaby என்பர்.

லாலா – ராரா – ராராட்டு; ராரா - ரோரோ -ரோராட்டு. லகரம் தமிழிற் சொன்முதலெழுத் தன்மையின், லாலாட்டு என்பது தாலாட்டு எனப்படும். ல த, போலி,

-

ஒ.நோ. கலம்பம் - கதம்பம், சலங்கை - சதங்கை.

பிள்ளைத் தமிழ்ப் பனுவலில், தாலாட்டுப்பருவம் தாலப்பருவம் எனப்படும். தாலம் என்பது தால் எனக் கடைக்குறைந்தும் வரும். தாலப்பருவச் செ-யுள்களில் மகுடமாக வரும் 'தாலோ தாலேலோ' என்னுந் தொடர் தாலாட்டுச் சொல்லாகும்.

தாலாட்டு - தாராட்டு.

மக்கள் தொடக்கூடாததும் குழந்தைகள் தின்னக் கூடாததுமான இழிபொருளை, தா-மார் குழந்தைகளிடம் 'சுக்கா' என்னுஞ் சொல்லாற் குறிப்பர்.

இக் க காண்டத்திற் கூறப்பட்ட கூறப்பட்ட ஐவகையொலிகளுள், உணர் வொலிகளும் குறியொலிகளும், சிறுபான்மையிலும் மொழிவளர்ச் சிக்குப் பெருந்துணை செ-யா வகையிலும் ஓரன்ன தன்மைய. ஏனை மூன்றனுள், குழவியொலிகளினும் வா-ச்செ-கையொலிகளும், செ-கையொலிகளினும் ஒப்பொலிகளும், இவ் விருவகையிலும் சிறந்தனவாம்.

வா-ச்