உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 13.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

இங்ஙனம் உலகியல் நிகழ்ச்சிகளையெல்லாம் ஊன்றிக் கவனித்து, சுட்டுக் கருத்துகளோடு அவற்றைத் தொடர்புபடுத்தி, உளநூற் கொப்ப வும் ஏரணநூற் கிசையவும், இயற்கையுண்மை எள்ளளவுந் தப்பாது, எல்லாக் கருத்துகளையுங் குறிக்கும் சொற்களை ஆக்கிக் கொண்ட முன்னைத் தமிழரின் நுண்மாண் நுழைபுலம் என்னே!

மூவகைச் சுட்டுகளிலும், முற்போக்குக் கருத்தை யுணர்த்தும் முன்மைச் சுட்டே, மொழிவளர்ச்சியிலும் முன்னேற்றத்தை யுண்டு

பண்ணியது, முன்னி மகிழத்தக்கது.

2. சுட்டொலித் திரிபுப் படலம்

மூவகைச் சுட்டுக் கருத்துகளினின்றும் நூற்றுக்கணக்கான வழிமுறைக் கருத்துகள் தோன்றியுள்ளமையால், மூவகைச் சுட்டொலி களினின்றும், ஒருபொருட் பல சொல்லும் பலபொரு ளொருசொல்லு மாக, பல்லாயிரக்கணக்கான சொற்கள் தோன்றியுள்ளளன. ஓரசைச் சொல்லாக மட்டுமன்றி ஓரெழுத்துச் சொல்லாகவுமுள்ள ஆ, ஈ, ஊ என்னும் மூன்றே மூன்று சுட்டொலிகளினின்று, இத்துணை எண்ணருஞ் சொற்கள் தோன்றியுள்ளதெங்ஙனம்? பல்வகைத் திரிபுகளே அதற்குக் காரணம். ஒரு சொல்லின் பொருள் திரியும்போது அச் சொல்லும் உடன் திரிய வேண்டும் என்னும் சொல்லியல் நெறிமுறைப்படி ஆ, ஈ, ஊ என்னும் முச்சுட்டுச் சொற்களும், மூவகைப் புணர்ச்சித் திரிபு, அறுவகைச் செ-யுள் திரிபு, பலவகைப் பண்புத்திரிபு, முக்குறை, மும்மிகை, மூவகைப் போலி, லக்கணப்போலி, முறைமாற்று, இனத் திரிபு, மோனைத்திரிபு, எதுகைத்திரிபு, மரூஉ முதலிய பல்வகைத் திரிபுகளால் பல்லாயிரக்கணக்கான சொற்களைப் பிறப்பித்திருக் கின்றன.

இத் திரிபுகளெல்லாம் குறிப்பொலிகட்கும் செல்லுமேனும், சிறப் பாகச் சுட்டொலிகட்கே பொருந்துவதனால், இக் காண்டத்தில் கூறப் பட்டன. இங்கும் முக்கியமானவையேயன்றி ஏனைய விளக்கப்படா. இவை யெல்லாவற்றையும் எமது 'செந்தமிழ்ச் சொல்லியல் நெறி முறைகள்' என்னும் நூலுட் கண்டுகொள்க.

சுட்டடிச் சொல்லாக்கத்திற்குப் பெருந்துணை செ-யுந் திரிபுகள், மும்மிகை, இனத்திரிபு, மோனைத்திரிபு என்னும் மூன்றாகும்.

மும்மிகை என்பன முக்குறைக்கு நேர்மாறானவை.

முதன்மிகை, இடைமிகை, கடைமிகை என்பன.

அவை