உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆர்த்தபகை வெல்லும் அணிகள் பலதந்து சீர்த்த புகழ்நிறுத்தும் செந்தமிழர் பாவாணர் கூர்த்த புலமையராய்க் கொள்கை அரிமாவாய்ப் போர்த்த இருளகற்றும் பொற்கதிரோன் பாவாணர் ஞால முதல்மொழி நந்தமிழே என்றுரைத்தும் மூலத் தமிழே திரவிடத்தின் தாயென்றும் ஆரியத்தின் மூலம் அதுவே எனவுரைத்தும் பூரியரின் வாயடைக்கப் பூட்டறைந்தார் பாவாணர் தென்குமரிக் கண்டமதே மாந்தன் பிறந்தகமாம் செந்தமிழும் ஆங்கே பிறந்ததென்றார் பாவாணர் முன்னை மொழிகாக்க மூத்த குடிகாக்கத்

தன்னை அழித்த தகையாளர் பாவாணர்

செந்தமிழே வாழ்வாய்த் திகழ்ந்ததனால் பாவாணர்

நந்தமிழ்த் தாத்தா நவில்.

-முனைவர் ந.அரணமுறுவல்

தமிழ்மவி

அறக்கட்டகை

சென்னை

600

017

‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு,

35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,

தியாகராயர்நகர், சென்னை - 17.