உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 14.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

எக்குலத்தாராயினும்

முதற்றா-மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

இல்லறம் நடத்தும் ஆசிரியரையும், ஐயர்

என்றழைப்பது வடார்க்காட்டு வழக்கு. முனிவரான ஆசிரியர் எங்கும் ஐயர் என்னும் பெயர்க்குரியர்.

"ஐயர் யாத்தனர் கரணம் என்ப

""

(தொல்.1091)

என்பதில், ஐயர் என்பது முனிவரைக் குறித்தது. பிங்கலம் முனிவர் தொகுதியை ஐயர் தொகுதி என வகுத்துக் கூறும். முனிவர் பல்வகை யிலும் மிகப் பெரியார் என்பது, 'பெரியாரைத் துணைக்கோடல்' 'பெரியாரைப் பிழையாமை' என்னும் திருக்குறளதிகாரங்களால் அறியப்படும். தமிழ்நாடு புகுந்த பிராமணர் இருவகை நிலைப்பட்டு சிரியத் தொழிலையே முதலாவது மேற்கொண்டமையால், அவர் ஐயர் எனப்பட்டனர். பூசாரியரான புரோகிதரும் ஒருசார் ஆசிரிய வகுப்பினரே. இதுபற்றியே, தமிழ்நாட்டுக் கிறித்தவக் குருமாரான பாதிரிமாரும் ஐயர் என அழைக்கப் பெறுகின்றனர். நாட்டுப் பாதிரி மாரை நாட்டையர் என்பர். குரு என்னும் பெயர் கலையாசிரியனையும் மதவாசிரியனையும் பொதுப்படக் குறிப்பது, அவ் விருவகையாரின் தொழிலொப்புமையை உணர்த்தும்.

அவர் என்னும் தென்சொல் தெலுங்கில் வாரு எனத் திரிவதால், அவர்கள் என்னும் உயர்வீற்றிற் கொத்த வாரு என்னுஞ் சொல்லொடு கூடி ஐயவாரு என நிற்கும் தெலுங்குப் பெயர், ஐயகாரு எனத் திரிந்து மால் நெறியார் (வைணவர்) ஆன தெலுங்கப் பிராமணரைக் குறிக்கும். ஐயகாரு என்பது, ஆங்கிலத்தில் ஐயங்கார் என்னும் வடிவங் கொள்ளும்.

ஒரு நாட்டு மக்களின்

ஒப்புயர்வற்ற ஆட்சித் தலைவன் அரசனாதலின், அவனும் ஐயன் எனப்படுவன்.

ஒரு பெண்ணுக்கு வாழ்க்கைத் தலைவன் அவள் கணவனா தலின், அவன் அவட்கு ஐயனாவன்.

“என்னைக்கு முதவாது

""

என்பதில், ஐ என்பது கணவனைக் குறித்தது.

இனி, எல்லா வுலகங்கட்கும் ஒரு பெருந்தலைவனான இறை வனுக்கு, ஐயன் என்னும் பெயருரிமை சொல்லாமலே விளங்கும். ஐயை என்னும் பெயர் காளியையும், மலைமகளையுங் குறித்தலால், ஐயன்