ஆ
83
மொழிநூல் மொழி நூல் முதலாவது கிரேக்கு, இலத்தீன் என்னும் மொழிகளைக் கற்குங் கல்வியாக, 18ஆம் நூற்றாண்டில் மேனாடுகளில் தோன்றிற்று. பின்பு, ஆங்கிலேயரும் விடையூழி யரும் (Missionaries) இந்தியாவிற்கு வந்து, சமஸ்கிருதத்திற்கும் கிரேக்க லத்தீன் மொழிகட்குமுள்ள நெருக்கத்தைக் கண்டு பிடித்தபின், ஐரோப்பாவில் ஆரிய மொழிகளைப்பற்றிச் சிறப்பாராய்ச்சி எழுந்தது. ஆரிய மொழிகளை யாராய்ந்தவர் களுள் கிரிம் (Grimm), வெர்ணெர் (Verner) என்ற இருவர் தலை சிறந்தவர். உலகத்தின் பல இடங்களுக்குச் சென்ற விடையூழியரும் வழிப்போக்கரும் அவ்வவ்விடத்து மொழிகளைக் கற்று, மேலை மொழிகளில் அவற்றின் இலக்கணங்களை வரைந்து வெளி யிட்டதுமன்றி, இனமொழிகளையெல்லாம் ஒப்பிட்டுப் பல குடும்பங்களாகவும் வகுத்துக்காட்டினர். ஒப்பியன் மொழி நூற்கலையே விடையூழியராலும் வழிப்போக்கராலும்தான் உருவாயிற்று என்று கூறினும் மிகையாகாது. பிறகலை யாராய்ச்சி யாளரும் மொழிநூலுக்கு உதவியிருக்கின்றனர்.
பல நாட்டு மொழிகள் மேனாட்டு மொழிகளில் வரையப் பட்ட பின், மாக்கசு முல்லர் என்ற மாபெரும் புலவர், சென்ற நூற்றாண்டில், தம் வாழ்நாளையெல்லாம் மொழிநூற் கல்விக்கே ஒப்புக்கொடுத்து, உலக மொழிகளிற் பெரும்பாலனவற்றை ஆராய்ந்து, தம் நுண்மாண் நுழைபுலத்தால் ஒப்பியன் நூலை உருவாக்கினார்.
மொழி
மாக்கசு முல்லர் திராவிட மொழிகளைச் சரியாய் ஆராயாத தாலும், அவற்றை வடமொழியின் கிளைகள் என்று தவறாக எண்ணியதாலும், திராவிடத்தின் உண்மையான இயல்புகளைக் கூறமுடியவில்லை. திராவிடம் வடமொழிச் சார்பற்றதென்றும், உலக முதன்மொழிக்கு மிக நெருங்கியதென்றும், வடசொல்லென மயங்கும் பல சொற்கள் தென்சொற்களேயென்றும், வடமொழி யில் கலந்துள்ளனவென்றும்,
பல
தமிழ்ச்சொற்கள்
எடுத்துக்காட்டி, மொழிநூற் சான்றுகளால்
கால்டுவெல் (Caldwell) கண்காணியரே. திராவிட மொத்தம் பன்னிரண்டென்பதும். அவற்றுள் ஆறு
முதன்முதல்
நிறுவியவர்
மொழிகள்
திருந்தினவும்,
ஆறு திருந்தாதனவுமாகும் என்பதும், பெலுச்சித்தானத்திலுள்ள பிராஹுயீ திராவிட மொழியேயென்பதும், இவருடைய கண்டு பிடிப்புகளே.திராவிடம் வடமொழிச் சார்பற்றது, வடமொழியில்