92
ஒப்பியன் மொழிநூல்
பொருளளவில் குறிக்கப்படுகின்றதேயன்றி ஒலியளவிலன்று. ஆகவே 'உச்சகாரம்'
'உப்பகாரம்' என்பை
முற்றியலுகரத்தைக்
குறிக்குமேயன்றிக் குற்றியலுகரத்தைக் குறியா என்பது மிகத் தேற்றம்.
மேற்கூறிய இரு நூற்பாக்களானும், முற்றியலுகர வீற்றுச் சொற்கள் மூன்றென்பது பெறப்படும். அவை உசு, முசு, தபு என்பன என்றார் நச்சினார்க்கினியர். இவை சிலவாதலின் இங்ஙனம் விதந்து கூறப்பட்டன.
சுக்கு, குச்சு,பட்டு, பத்து, கற்பு, மற்று என்பனபோன்ற குற்றியலுகரச்சொற்கள் எண்ணிறந்தனவாதலின், அவற்றிற்குத் தொகை கூறிற்றிலர் தொல்காப்பியர்.
பு, து என்னும் ஈறுகளைக்கொண்ட எண்ணிறந்த தொழிற் பெயர்களும்,து, சு என்னும் ஈறுகளைக்கொண்ட எண்ணிறந்த பிறவினைச் சொற்களும், குற்றியலுகர வீற்றுச் சொற்களாதல் காண்க. இதனாலேயே,
"உயிர்ஒள எஞ்சிய இறுதி யாகும்"
(36)
என்று இருவகை யுகரமுமடங்கப் பொதுப்படக் கூறி, பின்பு “உச்சகாரம்.... உரித்தே" என்றும், “உப்பகாரம்... மொழிப..." என்றும் முற்றுகரத்தை விதந்தோதினார் தொல்காப்பியர்.
(2) தொல்காப்பியர் குற்றியலுகரத்தை மெய்யீறாகக் கொண்டார் என்பது.
தொல்காப்பியப் புணரியலில்,
"மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல்
"குற்றிய லுகரமும் அற்றென மொழிப"
(2)
(3)
என்று குற்றியலுகரத்தை மெய்யீற்றோடு மாட்டேற்றிக் கூறிய தால், குற்றியலுகரத்தை மெய்யீறாகக் கொண்டனர் தொல் காப்பியர் என்றார் ரெட்டியார்.
குற்றியலுகரத்தைப் புள்ளியொடு நிலையலாகக் கூறியதால் குற்றியலுகரத்தைப் புள்ளியிட்டுக் காட்டும் வழக்கம் பண்டைக்