96
மெல்லின
ஒப்பியன் மொழிநூல்
டையின
தமிழர் உலகில் மிகப் பழைமையான மன்பதையராதலின், மொழியொலிமுறையில் குழந்தையர்போல்வர். முதலில், தமிழிலுள்ள எல்லாச் சொற்களும் உயிரீறாகவே ஒலித்தன. பின்பு, புலவராற் பண்படுத்தப்பெற்றபோது, மெய்களினின்றுமட்டும் றுமட்டும் உயிரீறு நீக்கப்பட்டது. இவ் வீரின மெய்களும் வல்லின மெய்யிலும் ஒலித்தற் கெளிதாதல் காண்க. இன்றும்,சில மெல்லின இடையின மெய்யீற்றுச் சொற்கள், பகாச்சொன்னிலையில் அங்ஙனம் மெய்யீறாக நிற்குமேயன்றிப் பகுசொன்னிலையில் நில்லா.
கா: பண்-பண்ணுகிறான், அள்-அள்ளுகிறான்.
இவை பண்கிறான், அள்கிறான் என்று வழங்காமை காண்க. இதனால், உயிரீற்றுநிலை முந்தியதேயன்றி, மெய்யீற்று நிலை முந்தியதன்று என்பது அறியப்படும்.
ஆரிய மொழிகள் தமிழுக்குப் பிந்தினவையாதலானும், திரிபு வளர்ச்சி மிக்கவையாதலானும், அவற்றில் வல்லின மெய்யும்
ஈறாகக்கொள்ளப்பட்டது.
பின்னியத்திலும் (Finnish), வடதுரேனிய மொழிகளுள் யூரலிய (Uralic) வகுப்பு முழுவதிலும், சொன்முதலில் இணை மெய்களையும், சொல்லீற்றில் ஒரு மெய்யையும் சேர்ப்பதில்லை. கிளாஸ் (glas) என்னும் ஜெர்மனியச்சொல் பின்னியத்தில் லாசி என்றெழுதப்படுகிறது. ஸ்மக் (smak), ஸ்ற்றார் (stor), ஸ்ற்றிரான்று (Stand) என்னும் சுவீடியச் (Swedish) சொற்கள் முறையே, மக்கு, ரந்த என்றெழுதப்படுகின்றன என்று' மாக்கசு முல்லர் கூறுகிறார்.
சூரி,
திராவிடம் துரேனியக் கிளையாகக் கொள்ளப்படுவதையும், ஹாஸ்பிற்றல், பாங்க், ப்வீஸ் முதலிய ஆங்கிலச் சொற்கள், முறையே, ஆஸ்பத்திரி, பாங்கி, பீசு என்று உயிரீறாகத் தமிழில் வழங்குவதையும் நோக்குக.
(4) வல்லினமெய் இரட்டித்தல் இல்லை என்பது.
வல்லினமெய் இரட்டித்தல் என்பதே யில்லையென்றும்,ஆட்டு, போக்கு முதலிய பிறவினைகள் எல்லாம்,
ஆடு +து = ஆட் +து = ஆட்டு, போகு +து = போக் +து = போக் + து = போக்கு,
7 L.S.L. Vol. II, p. 207