98
ஒப்பியன் மொழிநூல்
வடிவம் ஏற்பட்டபின், அவ் வீறு பெறாத பண்டை வடிவம் எச்சமாக மட்டும் வழங்கி வருகின்றது.
போக்கு, ஆட்டு முதலிய தொழிற்பெயர்களும் அசையழுத் தத்தால் ஈறு இரட்டித்தவையே.
சிற்றடி, சீறடி என வழங்கும் இரு வடிவுகளுள், சீறடி என்பதே சிறந்ததென்றும்,சிற்றடி என்பது சிறுபான்மை வழக்கேயென்றும் கூறினார் ரெட்டியார்.
பச்சிலை, பாசறை; செவ்வாம்பல், சேதா; முதியோர், மூதுரை எனப் பண்புப் பெயர்கள் சிறுபான்மை நீளாதும் நீண்டும் இருவகையாய் வருதலானும், பெரும்பான்மை நட்டாறு, புத்துயிர், குற்றுகரம் என நீளாது வலித்தே வருதலானும், அவர் கூற்றிற் சிறந்த தொன்றுமில்லையென விடுக்க.
(5) ‘அரவு’
என்றொரு
தொழிற்பெயரீறு
இல்லையென்பது.
அரவு என்று ஒரு தொழிற்பெயரீறே யில்லையென்று கூறி, கூட்டரவு, தேற்றரவு என்னுந் தொழிற்பெயர்களை, முறையே,
கூடு = கூட் + தரவு = கூட்டரவு தேறு = தேற் + தரவு = தேற்றரவு
என்று பிரித்துக் காட்டினார் ரெட்டியார்.
'ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் வேண்டும்' என்றாற் போல, குற்றுகரத்தை மெய்யீறாகக்கொண்ட ஒரு வழுவை மறைக்க, இங்ஙனம் ஒன்பது வழுக்கள் நேர்ந்திருக் கின்றன.
அரம் என்றொரு தொழிற்பெயரீறு இருப்பது, விளம்பரம்
என்னும் தொழிற்பெயரா லறியப்படும்.
அரம் என்னும் ஈறே அரவு என்று திரியும்.
அரம் - (அரமு) - அரவு.
ஒ.நோ. உரம் - உரவு, தடம் - தடவு, புறம் -புறவு.
(6) மூவிடப்பெயர்
வினாப்பெயர்களின் அமைப்பு,
உயிரெழுத்து வரிசைமுறையைப் பின்பற்றியதென்பது.