மொழிநூல்
101
பெருகுவதாலும், ஒவ்வொரு மொழியின் அறிவுக்கும் பிறமொழியறிவு ஏதேனும் ஒருவகையில் உதவுவதேயாகும்.'
10.
தாய்மொழி முன்னும் முன்னும் அயன்மொழி பின்னும் கற்கப்பட வேண்டும்.
அதன்
ஒருவன் கல்லாமலே தன் தாய்மொழியில் பேசக்கூடு மாயினும், மரபையும் லக்கணத்தையும் கற்றே யறிய வேண்டியதிருக்கின்றது. தாய்மொழியியல்பை யறியுமுன் அயன்மொழியை விரிவாய்க் கற்பவர், அயன்மொழி வழக்கைத் தாய்மொழியிற் புகுத்திவிடுவர்.
தமிழைக் கல்லாது ஆங்கிலத்தையே பயின்ற சில தமிழர், பெரும்பாலுங் கிறிஸ்தவர், நன்றாய் விளையாடினார்கள் என்பதை விளையாட்டில் நன்றாய்ச் செய்தார்கள் என்று கூறுதல் காண்க.
11. முக்குல மொழிகளும் ஒரே மூலத்தின.10
ஒரு மரத்தில், ஒரே அடியினின்று பல கவைகளும், அக் கவைகளினின் று பல கிளைகளும், அக் கிளைகளினின்று பல கொம்புகளும், அக் கொம்புகளினின்று பல கப்புகளும், அக் கப்புகளினின்று பல வளார்களும் தோன்றுகின்றன. இங்ஙனமே, உலக மூல மொழியினின் று, பல குலநிலைகளும், அக் குல நிலைகளினின்று, பல குடும்ப நிலைகளும், அக் குடும்ப நிலைகளினின்று பல மொழிகளும், அம் மொழிகளினின்று பல கிளைமொழிகள் அல்லது மொழி வழக்குகளும் தோன்றியுள்ளன.
உலக மொழிகளின் முக்குலத் தாய்களும் ஒரே மூலத்தின என்று, சென்ற நூற்றாண்டிலேயே, மாக்கசு முல்லர் தேற்றமாய்க் கூறிவிட்டார்.
பண்டைக் காலத்தில், ஆரியர் வருமுன், இந்தியா முழுதும், பல மொழிவழக்குகளாக வேறுபட்ட ஒரே மொழி (தமிழ்) வழங்கினதாகச் சில தொல்காப்பியக் குறிப்புகளாலும் மொழிநூ லாராய்ச்சியாலும் அறியக் கிடக்கின்றது. ஆரியர் வந்த பிறகுங்கூட, உண்மையான மொழிகளாக ஒப்புக்கொள்ளப்
9
இங்குக் கூறியது மொழியறிஞருக்கேயன்றி, இந்திக் கட்டாயக் கல்விபோல எல்லார்க்குமன்று. 10 L.S.L.Vol. I, pp. 35, 375,387.