உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

103

முதலாவது கணவனும் மனைவியுமாக இல்லறந் தொடங்கும் இருவர், பின்பு பெரிய குடும்பமாகப் பெருகுவதையும், நாளடைவில் சிற்றூர் நகரும் நகர் மாநகருமாவதையும், குடி மதிப்பறிக்கைகளில் வரவர மக்கட்டொகை மிகுந்து வருவதையும் காண்பார்க்கு, மக்கள் எல்லாம் ஒருதாய் வயிற்றினர் என்பது புலனாகாமாற் போகாது. மக்கள் ஒருதாய் வயிற்றினராயின், அவர்கள் பேசும் பல்வேறு மொழிகளும் ஒரு மூலத்தினவாதல் வேண்டும்.

மக்கள்தொகை வளர்ச்சிக்குக் காட்டாக, மாக்கசு முல்லரின் மொழிநூற் கட்டுரைகளின் முதன் மடலத்தில், 62ஆம் பக்க அடிக்குறிப்பிற் காட்டியுள்ள ஒரு குறிப்பை இங்குக் கூறுகின்றேன்.

66

ஒரு நங்கை பதினாறு பிள்ளைகளைப் பெற்று, அவருட் பதினொருவர் மணந்தபின் இறந்தாள். அவள் இறக்கும்போது, 144 பேரப்பிள்ளைகளும், 228 பேரப் பேரப்பிள்ளைகளும், 900 பேரப் பேரப் பேரப்பிள்ளைகளும் அவளுக்கிருந்தனர்.”

முண்டாமொழியினர்க்குள் இருபதிருபதாய் எண்ணும் வழக்கம் இருப்பது, கையையுங் காலையும் ஒன்றுபோற் கருதத்தக்க அநாகரிக நிலையில், அவர் முன்னோர் இருந்ததைக் காட்டும்.

மக்கள் பெரும்பாலும் தட்பவெப்பநிலை வேறுபாட்டா லேயே, பல வகுப்பாராக வேறுபட்டுக் காண்கின்றனர். இன்றும், நாகரிக வாழ்க்கையும் கல்வியுமிருப்பின் பல வகுப்பாரும் ஒரு நிலையராகவும் ஒத்த கருத்தினராகவும் வாழக் கூடும்.

12. ஓர் இயற்கைமொழி தோன்றும் வழிகள் பல்வகைய.

சிலர்

உலகத் தாய்மொழி தோன்றிய வழியைப்பற்றிப் பலரும் பல வகையான கருத்துக் கொண்டனர். சிலர் ஒப்பொலிக் கொள்கை (Ono- matopoeic theory)யும், ணர்ச்சியொலிக்கொள்கை (Interjectional theory)யும், சிலர் சுட்டடிக் கொள்கை (Demonstrative theory)யும் எடுத்துக்கூறினர். ஓர் இயற்கைமொழி ஒரு வழியிலன்றிப் பல வழிகளில் தோன்றுமென்பது பின்னர் விளக்கப்படும்.

மொழி இயற்கையாய்த் தோன்றியதென்னும் இயற்கைக் கொள்கை(Natural theory)யும், இடுகுறிகளா ய்த்

தோன்றிற்

றென்னும் இடுகுறிக்கொள்கை(Arbitrary theory)யும், பலர் கூடி