மொழிநூல்
105
15. சரித்திரத்தால் ஏனை மொழிக்குள் அடக்கப்படாத முன்னை மொழிக்கே மூலமொழி ஆய்வு ஏற்கும்.
மலையாளம், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளுள், மூல மொழிக்குரிய இயல்புகள் இரண்டொன்று தோன்றினும் அவை கொள்ளப்படா. ஏனெனில் அம் மொழிகள் ஒவ்வொன்றும் ஏனைய மொழிக்குள் அடங்கிவிடுதல் சரித்திரத்தால் அறியப் படுகின்றது.
16. மொழி மாந்தன் அமைப்பே.12
மொழி என்று பொதுப்படக் கூறுவதெல்லாம் உலக முதன் மொழியையே. எப்பிக்கூரஸ் (Epicurus), அரிஸ்ற்றாட்டில் (Aristotle) முதலிய கிரேக்க மெய்ப்பொருணூலார், மொழி ஐம்பூதம்போல இயற்கையானதென்று கொண்டார். இந்திய முன்னோருக்கும் அக் கருத்தே யிருந்தது.
ஒலி என்றுமுள்ளதேனும், அதைக் கருத்தறிவிக்கும் கருவியாகக் கொண்டது மாந்தன் வேலையே. இதற்குச் சான்றாக விலங்கு பறவை முதலியவற்றிற்குக் கடவுள் பெயரிட்டதாகக் கூறாமல், ஆதாம் பெயரிட்டதாகக் கிறிஸ்தவ மறையிற் கூறியிருப்பதைக் காட்டினர் மாக்கசு முல்லர்.
தேவமொழியென்று உலகத்தில் ஒரு மொழியுமில்லை.
17. மொழி மக்கள் கூட்டுறவா லாயது.
மொழி ஒருவனால் அமைந்ததன்று. ஒருவன் தனித்து வாழ்வானாயின் அவனுக்கு மொழியே வேண்டியதில்லை. மக்கள் ஒன்றாய்க் கூடி உறவாடும்போதே தங்கள் கருத்தைப் பிறர்க்குத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. அதனால் மொழி பிறக்கிறது.
ஒரு மொழியிலுள்ள சொற்களில், சில தொழில்பற்றியவை; சில திணைபற்றியவை; சில குலம்பற்றியவை; சில வழிபாடு பற்றியவை. இங்ஙனம் பலவகையில் பல வகுப்பாரால் தோற்றப் பெற்ற சொற்களெல்லாம் ஒன்றுசேர்ந்ததே மொழியாகும்.
இக்காலத்தில் உவில்க்கின்ஸ் போன்ற ஒருவர், இடுகுறி களைக்கொண்டு ஒரு புதுமொழி யமைக்க முடியுமாயினும், 12 L.S.L. Vol. I, p. 31