உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

107

வேண்டுமாதலின், அக்காலமெல்லாம் வளர்ச்சியிலிருந்துதான் பின்னர் மொழி உருவாகியிருக்கும்.

20. மொழிக்கலை ஓர் ஆக்கக் கலையாகும்

கலைகள்

இயற்கலை (Physical Science),

ஆக்கக்கலை

(Historical Science) என இருவகைப்படும். பூதநூல் ஓர் இயற்கலை. ஓவியம் ஓர் ஆக்கக்கலை. அதுபோல மொழிக்கலையும் ஒர் ஆக்கக்கலையே.

21. மொழி பொதுமக்களாலும் நூல்கள் புலவராலும் ம் ஆக்கப்பெற்றவை.

22. ஒருமொழி சில காரணத்தால் பலவாய்ப் பிரியலாம்.

ஒரு பெருமொழி பல சிறுமொழிகளாகப் பிரிந்து போவதற்குக் காரணங்களாவன:

(1) மன்பதைப்பெருக்கம்

ஒரு மொழியைப் பேசுவோர், மிகப்பல்கி ஒரு வியனிலப் பரப்பில் பரவிவிடுவாராயின், தட்பவெப்பநிலை வேறுபாடு சேய்மை முதலியவற்றால், பல மொழிவழக்குகள் தோன்றி, நாளடைவில் வேறு மொழிகளாகப் பிரிந்துவிடும்.

பொதுவாய், 100 மைல்

சேய்மையில் இரண்டொரு

சொற்களும், 200 மைல் சேய்மையில் சில சொற்களும், 400 மைல் சேய்மையில் மொழிவழக்கும், அதற்கப்பால் மொழியும் வேறுபடுவதியல்பு. இப் பொதுவிதிக்குச் சில தவிர்ச்சி (exception) களுமுண்டு.

(2) ஒலித்திரிபு (Phonetic Decay and Phonetic Variation)

i. சோம்பலால்.

கா: பளம் (பழம்)

ii. உறுப்பு வேறுபாட்டால்.

தட்பவெப்பநிலை, நிலச்சிறப்பு, ஊண், தொழில், பழக்க வழக்கம், இயற்கை முதலிய காரணங்களால், எழுத்தொலிக்குக் கருவியாகும் உறுப்புகள், ஒவ்வொரு நாட்டாரிடத்தும் நுட்பமாய்