உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

x. வழக்கு (Usage)

(1) இலக்கணமுடையது;

(2) வழுவுள்ளது.

(5) சொற்றெரிந்து கோடல் (Natural Selection)

109

தெலுங்கு இல் என்னுஞ் சொல்லையும், கன்னடம் மனை என்னுஞ் சொல்லையும் தமிழினின்றும் தெரிந்துகொண்டது

சொற்றெரிந்துகோடல்.

(6) வழக்கற்ற சொல் வழங்கல் (Colonial Preservation).14 நோலை என்னும் தமிழ்ச்சொல்லின் மூலம் தெலுங்கில் நூன (எள்நெய்) என்று வழங்குவது வழக்கற்ற சொல் வழங்கல்.

(7) புதுச்சொல்லாக்கம்.

தாய்வழக்கி லில்லாத சொல், தொகைச்சொல், ஈறு, ஒட்டுச் சொற்கள் முதலியவற்றைப் புதிதாய் ஆக்கிக் கொள்ளல்.

(8) தாய்வழக்கொடு தொடர்பின்மை.

சேரநாட்டுத் தமிழ், சேரமான் பெருமாள் நாயனார்க்குப் பின், தமிழொடு தொடர்பின்மையாலேயே வேறு மொழியாய்ப் பிரிய நேர்ந்தது.

(9) பிறமொழிக் கலப்பு (Admixture of foreign elements)

மேற்கூறிய திரிபு முறைகளெல்லாம், சோம்பலாலும் அறியாமையாலும் நேர்ந்து ஒரு பயனும் பயவா பயவாதிருப்பின், மொழிச்சிதைவு (Linguistic Corruption) என்னும் கேட்டிற்குக் காரணமாகும்; அங்ஙனமன்றி, அதற்கு மறுதலையாயிருப்பின், மொழி வழக்கு வளர்ச்சி (Dialectic Regeneration) என்னும் ஆக்கத்திற்குக் காரணமாகும்.

கு

தெலுங்கு கன்னடம் முதலிய மொழிகள் தமிழினின்றும் பிரிந்துபோனது, திராவிடர் தவறுமன்று, ஆரியர் தவறுமன் று, மொழிவழக்கு வளர்ச்சியேயாகும். ஆனால், அம் மொழிகளில் 14 English, Past and Present by Trench. p. 55