உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

பண்டைத் தமிழகம் - குமரிநாடு

1. குமரிநாடு1

i. அகச்சான்றுகள்

தெற்கே, இந்துமா கடலில், ஒரு பெருநிலப்பரப் பிருந்த தென்றும், அதுவே பண்டைப் பாண்டி நாட்டின் பெரும்பகுதி யென்றும், அது பின்னர்க் கடலாற் கொள்ளப்பட்டதென்றும் பல தமிழ்த் தொன்னூல்களிற் கூறப்படுகின்றது, அந் நாட்டைத் தமிழர் குமரியாற்றின் அல்லது குமரிமலையின் பெயரால் குமரி நாடென்றும், மேனாட்டுக் கலைஞர் லெமுர் (Lemur) என்ற ஒரு குரங்கினம் அங்கு வதிந்ததால் லெமுரியா (Lemuria) என்றும் அழைக்கின்றனர்.

குமரிநாட்டின் தென்பாகத்தில் பஃறுளியென்றோர் ஆறோ டிற்றென்றும், அதன் கரையில் மதுரையென்றோர் நகரிருந்த தென்றும், அதுவே, பாண்டி நாட்டின் பழந்தலைநகர் என்றும், அங்கேயே தலைக்கழகம் இருந்ததென்றும், அக் கழகத்தின் பின் நெடியோன் என்னும் பாண்டியன் காலத்தில் அகத்தியர் அங்கு வந்து சேர்ந்தார் என்றும், அப்போது மதுரையைக் கடல்கொள்ள, நெடியோன் வடக்கே வந்து கபாடபுரத்தை யமைத்துத் தலைநகராகக் கொண்டானென்றும், அங்கே இடைக்கழகம் நிறுவப்பட்டதென்றும், பின்பு கபாடபுரமும் கடல் வாய்ப்பட, பாண்டியன் உள்நாட்டுள் வந்து மணவூரில் இருந்தா

1 பண்டைத்தமிழகம் (The Original Home of the Dravidian Race) குமரிநாடே என்று யான் எழுதிய நூலை 1938ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எனக்குக் 'கீழ்கலைத் திறவோன் பட்டத்திற்கு(M.O.L Degree), இடுநூலாக (Thesis), சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு விடுத்தேன். மூன்றாமாதம் அது தள்ளப்பட்டதாகப் பல்கலைக்கழக அறிவிப்பு வந்தது. என் இடுநூலை ஆய்ந்தவர் யாரென்றும், தள்ளினதற்குக் காரணங்கள் எவையென்றும் பல்கலைக்கழகத்திற்கு எழுதிக் கேட்டதற்கு, அவை மறைபொருள் என்று பதில் வந்துவிட்டது.