உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

ஒப்பியன் மொழிநூல்

பனிமலை(இமயம்) ஆகிய பெருமலை தோன்றியுள்ளதினாலும், வடதென்றிசைகளை முறையே, மங்கலமும் அமங்கலமு முள்ளன வாகக் கொண்டனர் தமிழர். இதை ஆரியர் பயன்படுத்திக் கொண்டு, வட இந்தியாவை நல்வினை நிலம் (புண்ணிய பூமி) என்றும், தென்னிந்தியாவைத் தீவினை நிலம் (பாவ பூமி) என்றும் கூறியதாகத் தெரிகின்றது. தமிழர் திசைகளை நல்லதும் தீயதுமாகக் கொண்டாரேயன்றி இடங்களையல்ல. திபேத்தை நோக்க, வட இந்தியா தீயதும், தென்துருவத்தை நோக்க தென் இந்தியா நல்லதுமாதல் காண்க.

திசைபற்றிய ஆரியக் கொள்கையைக் கண்டிக்கவே,

"எந்நிலத்து வித்திடினுங் காஞ்சிரங்காழ் தெங்காகா தென்னாட் டவருஞ் சுவர்க்கம் புகுதலால் தன்னால்தான் ஆகும் மறுமை வடதிசையுங்

கொன்னாளர் சாலப் பலர்"

என்னும் நாலடிச் செய்யுள் எழுந்ததாகத் தெரிகின்றது.

(நாலடி. 243)

சிவன் அல்லது முருகன் குறிஞ்சித் தெய்வமாதலின், தெற்கே குமரிமலையமிழ்ந்து போனபின், பனிமலையைச் சிவபெருமானின் சிறந்த இருக்கையாகக் கொண்டனர் தமிழர். (இதையும் ஆரியர் சிவபெருமானை ஆரியத் தெய்வமாகக் கூறுவதற்குப் பயன் படுத்திக்கொண்டனர்.)

"பஃறுளி...வாழி" என்னும் சிலப்பதிகாரப் பகுதியை நோக்குக.

'புதுச்சேரிக்கு மேற்கே ஒரு காததூரத்திலுள்ள பாகூர்ப் பாறையில், பாகூருக்குக் கிழக்கே கடல் நான்கு காதம்..... எனக் கல்வெட்டிருக்கின்றதெனவும், இப்பொழுது அப் பாகூருக்குக் கிழக்கே ஒரு காத தூரத்திலிருக்கின்றதெனவும் கூறுவர். இதனால் மூன்று காதம் கடல்கோள் நிகழ்ந்துள்ளதென்பது புலனாம் கார்த்திகேய முதலியாரும்,

கடல்

17

என்று

"இப்போது கன்னியாகுமரி முனையில் மூன்று கோயில்கள் உள்ளன. ஒன்று முற்றிலும் அழிந்துகிடக்கின்றது. அது நாள்

17 மொழிநூல், ப. 14.