உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

ஒப்பியன் மொழிநூல் பெருமலையானது மேலைக்கடலில் தொடங்கித் தென்வடலாகக் குமரிக்குத் தென்பாலுள்ள நிலப்பகுதியிலே நெடுஞ்சேய்மை சென்று, பின் தென்மேற்காகத் திரும்பி, 'மடகாஸ்கர்' என்ற ஆப்பிரிக்கத் தீவுவரை சென்றதாகத் தெரிகின்றது" என்று பேராசிரியர் கா. சுப்பிரமணியபிள்ளை கூறுகின்றார்.

(4) சாண் மர்ரே ஆராய்ச்சிப்படை

(இந்தியப் பட விளக்க வாரகை - ஜூலை 29, 1934)

"இந்து மாக்கடலைத் துருவுவதற்கு 20,000 பவுன் வைத்து விட்டுப்போன, காலஞ்சென்ற வயவர் சாண் மர்ரே (Sir John Murray)யால் தோற்றுவிக்கப்பட்ட கடல்நூல் (Oceanography) என்னும் தற்காலக் கலை, ஒருகாலத்தில், தென் அமெரிக்காவி னின்று ஆப்பிரிக்காவையொட்டியும் இந்தியாவையொட்டியும் தென்கண்டம் (Australia) வரை படர்ந்திருந்ததும் காண்டுவானா (Gondwana)க் கண்டம் அல்லது காண்டுவானா நாடு என்று அறியப்பட்டதுமான, ஒரு முழுகிய வியனிலத்தைப்பற்றி, அண்மையில் வியக்கத்தக்க வுண்மைகளைக் கண்டு பிடித்திருக் கிறது. இதன் சான்று, பனிமலையும் (Himalayas), காக்கஸஸ் (Caucasus), ஆல்ப்ஸ் (Alps), பிரனீஸ் (Pyrenees) என்னும் மலைகளும் கடலுக்குள்ளிருந்த காலத்தில்,நாலு கண்டங்களிலும் ஒரே வகையான நிலவுயிரிகளும் செடிகொடிகளும் கன்னிலையிற் காணப்படுகின்றன என்னும் உண்மையைச் சார்ந்ததாகும். மபாஹிஸ் (Mabahiss) என்னும் சிறிய எகிபதிய மரக்கலத்தில், பிழம்புத்தலைவர் செய்மூர் செவல் (Colonel Seymour Sewell, F.R.S.) என்பவரின்கீழ், கடந்த ஏழு மாத காலமாக நடைபெற்றுவந்த புதுக் கண்டு பிடிப்புகளை, வியன்புலவர் ஜே. ஸ்ற்றான்லி காடினர் (Professor J. `Stanley Gardiner') வரணிக்கிறார். வியன்புலவர் காடினெரைக் கண்டு பேசியபின், எவ்ப். ஜீ. பிரின்ஸ் ஒயிற்று (F.G. Prince White) ‘நாளஞ்சல்' (“Daily Mail”) தாளிகையில், பின் வருமாறு வரைகிறார்:

"காண்டுவானா நாடு நச்சுயிரிக்காலத்திற்குரியதாயும் (Reptilian Period), ஐயமற, சினாம்புள்ள நச்சுயிரிப் பூதங்களின் இருப்பிடமாயுமிருந்தது. தென்மேற்காகச் சொக்கோத்ராவை (Socotra) நோக்கிச் செல்லும் 10,000 அடி உயரமுள்ள மலைத் தொடர்,