உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

திராவிடம் தெற்கிற் சிறத்தல்

ஒப்பியன் மொழிநூல்

i. தமிழ் திராவிடத்தின் சிறந்த வடிவமாதல்

(1) தமிழின் தொன்மை : தமிழரசரின் பழைமை.

கிறித்துவுக்கு 1000 ஆண்டுகட்கு முற்பட்ட பாரதப் போரில், உதியன் சேரலாதன் என்னும் சேரமன்னன், இரு படைகட்கும் சோறு வழங்கினதாகப் புறப்பாடல் கூறுகின்றது.

சேரசோழ பாண்டிய நாடுகள் பாரதத்திலும், கிறித்துவுக்கு 2000 ஆண்டுகட்கு முற்பட்ட வால்மீகி இராமாயணத்திலும் கூறப்பட்டுள்ளன.

"வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பிற் றலைப்பிரித லின்று”

66

""

என்னுங் குறளுரையில், "பழங்குடி

(குறள்.955)

தொன்றுதொட்டு வருகின்ற

குடி யின்கட் பிறந்தார்... தொன்றுதொட்டு வருதல் சேரசோழ பாண்டிய ரென்றாற்போலப் படைப்புக் காலந் தொடங்கி மேம்பட்டு வருதல்” என்று கூறினார் பரிமேலழகர்

சூரவாதித்தன், சிபி, முசுகுந்தன், தூங்கெயிலெறிந்த தொடித் தோட் செம்பியன், காந்தமன் முதலிய சோழமன்ன ரெல்லாம் சரித்திர காலத்திற்கு மிக முற்பட்டவர். சோழருக்கு முற்பட்டவர் பாண்டியர். முதற்காலத்தில், பாண்டியன் ஒருவனே தமிழுலகம் முழுவதையும் ஆண்டானென்றும், பின்பு ஒரு பாண்டியனின் தம்பிமாரான சோழசேரர் தமையனோடு பகைமை பூண்டு, வடக்கே பிரிந்து வந்து சோழசேர அரசியங்களை நிறுவின ரென்றும் ஒரு வழிமுறைச் செய்தி வழங்குகின்றது.

பாண்டியன் சோழன் சேரன் என்னும் பெயர்கள் வட சொற்களென்றும், பாண்டியன் பஞ்சவன் என்னும் பெயர்கள் பாண்டவர் தொடர்பால் வந்தவை யென்றும் மயங்கினர் கால்டுவெல். அப் பெயர்களின் பொருள்களாவன :

பாண்டியன்

வண்டி - பண்டி - பாண்டி - பாண்டியன்.

1

புறம். 2