உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் தமிழ்மொழியின் பழைமை

141

தமிழ்மொழி அசைநிலை முதலிய ஐவகை நிலைகளை யடைந்துள்ள ளமையாலும், நகை, வளை முதலிய தற்காலப் பகுதிகள் முற்காலத்துத் தொழிற்பெயரா யிருந்தமையாலும், சிவன், முருகன் முதலிய தெய்வங்களைத் தலைக்கழக வுறுப்பினராய்க் கூறியிருத்த லாலும், சிவனே தமிழை உண்டு பண்ணினார் என்னுங் கூற்றாலும் தமிழின் பழைமையை யறியலாம்.

தமிழ்நூல்களின் பழைமை

தொல்காப்பியர்

தொல்காப்பியரின்

பெயர் இயற்பெயர் திரண தூமாக்கினியென்று சொல்லப்படுவதால், தொல்காப்பியர் என்னும் பெயர் சிறப்புப்பெயரே யாகும். இப் பெயருக்குப் பழைமையான காவிய மரபைச் சேர்ந்தவரென்று பொருள் கூறப்படுகின்றது. தொல்காப்பியர் கவியென்ற முனிவரின் மரபினராயின், காவியர் அல்லது காப்பியர் என்றழைக்கப்படுதல் இயல்பே. ஆனால், பல்காப்பியர் என்று இன்னொரு புலவர் பண்டைக்காலத்தில் தமிழ்நாட்டி லிருந்தனர். தொல்காப்பியர் என்னும் பெயருக்குப் பழைமையான காவிய மரபினர் என்னும் பொருள் பொருந்துமாயினும், பல்காப்பியர் என்னும் பெயருக்குப் பல காவிய மரபினர் என்று பொருள் கூறல் பொருந்தாது. ஆகவே, காப்பியர் என்னும் பெயருக்கு வேறொரு பொரு ளிருத்தல் வேண்டும்.

அகத்தியர் காலத்திற்கு முன், சிறிது காலம் தமிழ்நாட்டில் தமிழாராய்ச்சி குன்றியிருந்தமை, சில சான்றுகளால் அறியக் கிடக்கின்றது. தொல்காப்பியப் பாயிரத்தில், 'முந்துநூல் கண்டு' என்று கூறிருப்பதாலும், பிற சான்றுகளாலும், தொல்காப்பியர் அகத்தியர்க்குத் தெரியாத சில பழைய தமிழ்நூல்களைக் கண்டு பிடித்தாரென்றும், அதனால் தொல்காப்பிய ரெனப்பட்டார் என்றும் தெரிகின்றது. தொன்மையான காப்பியங்களை யறிந்தவர் தொல்காப்பியர் என்றும், பல காப்பியங்களை யறிந்தவர் பல்காப்பியர் என்றும் கூறப்பட்டனர். தொல்காப்பியர் இயற்றிய நூல் தொல்காப்பியம் என்றும், பல்காப்பியர் இயற்றிய நூல் பல்காப்பியம் என்றும் அதனதன் ஆசிரியராற் பெயர் பெற்றன.