164
ஒப்பியன் மொழிநூல்
களவியலுரையில், நச்சினார்க்கினியர், "பாங்கன் நிமித்தம் பன்னிரண் டென்ப
என்னும் நூற்பாவிற்கு,
66
22
(13)
'அகனைந்திணையும் அல்லாதவழிப் பாங்கன் கண்ணவாகிய நிமித்தம் பன்னிருபகுதியவாம்” என்றவாறு.
'எண்வகை மணத்தினும் இடைநின்று புணர்க்கும் பார்ப்பான், இருவகைக் கோத்திரம் முதலியனவுந் தானறிந்து இடைநின்று புணர்த்தல் வன்மை, அவர் புணர்தற்கு நிமித்தமாதலின். அவை அவன் கண்ணவெனப்படும். இவனைப் பிரசாபதியென்ப...அவ்வாற்றானே பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம் எனவும்; முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் எனவும்; அசுரம், இராக்கதம், பேய் எனவும் பன்னிரண்டாம்” என்றும்,
"முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே
என்னும் நூற்பாவிற்கு,
22
(14)
"இதற்கு முன்னின்ற அசுரமும் இராக்கதமும் பைசாசமுங் கைக்கிளை யென்றற்குச் சிறந்திலவேனும், கைக்கிளையெனச் சுட்டப்படும்" என்றும்,
“பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே’
என்ற நூற்பாவிற்கு,
777
(15)
"பின்னர் நின்ற பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வத மென்னும் நான்கினையும் பெருந்திணை தனக்கு இயல்பாகவே பெறுமெனவுங் கூறப்படும்" என்றும்,
"முதலொடு புணர்ந்த யாழோர் மேன
தவலருஞ் சிறப்பி னைந்நிலம் பெறுமே"
என்னும் நூற்பாவிற்கு,
(16)
"மேற்கூறிய நடுவணைந்திணையுந் தமக்கு முதலாக அவற்றோடு பொருந்திவரும் கந்தருவ மார்க்கம் ஐந்தும், கெடலருஞ் சிறப்பொடு பொருந்திய ஐவகை நிலனும் பெறு
7 இதுவும் முந்தின நூற்பாவும் நமச்சிவாய முதலியார் பதிப்பில் இரண்டாகவும்,
கனகசபாபதி பிள்ளை பதிப்பில் ஒன்றாகவும் காட்டப்பட்டுள்ளன.