184
அழலினா லசைந்தது நகை; அணியினா லொசிந்த திடை; குழலினா னிமிர்ந்தது முடி; குறையினாற் கோடிற்று நிறை;
இருசீரோரடி யம்போதரங்கம்
“உட்கொண்ட தகைத்தொருபால்; உலகறிந்த வலத்தொருபால்;
கட்கொண்ட றுளித்தொருபால்;
கழிவெய்தும் படித்தொருபால்; பரிவுறூஉந் தகைத்தொருபால்; படிறுறூஉம் பசப்பொருபால்;
இரவுறூஉந் தகைத்தொருபால்; இளிவந்த வெளிற்றொருபால்;
மெலிவுறூஉந் தகைத்தொருபால்;
விளர்ப்புவந் தடைந்தொருபால்;
பொலிவுசென் றகன்றொருபால்; பொறைவந்து கூர்ந்தொருபால்;
காதலிற் கதிர்ப்பொருபால்;
கட்படாத் துயரொருபால்;
ஏதில்சென் றணைந்தொருபால்;
இயனாணிற் செறிவொருபால்;
தனிச்சொல்
எனவாங்கு ;
சுரிதகம்
ஒப்பியன் மொழிநூல்
இன்னதிவ் வழக்க மித்திர மிவணலம்
என்னவு முன்னாட் டுன்னா யாகிக்
கலந்தவ ணிலைமை யாயினு நலந்தகக் கிளையொடு கெழீஇய தளையவிழ் கோதையைக் கற்பொடு காணியம் யாமே
பொற்பொடு பொலிகநின் புணர்ச்சி தானே.
வடமொழியிலுள்ள உத்தம் முதல் உற்காதம் வரையுள்ள 26 சந்தங்களும்; நிகர்த், புரிக், விராட் முதலிய அளவழிச் சந்தங்களும்; மண்டிலம் (விருத்தம்) என்னும் இனயாப்புள் அடங்கும்.