190
ஒப்பியன் மொழிநூல் யென்ப. பிறவும் இன்னோரன்ன பலவுஞ் செய்யுட்கணியா மென்பது அவர் கருத்து.ஒருங்கே யென்பதேயன்றி மூன்று தாழிசையுள் மூன்று பொருள்கூறி, 'எனவாங்கு' என்பதொரு சொல்லான் முடிந்தவழியும் ‘எனவாங்கு' என்பதோர் மொழி எனவென்பது ஒரலங்காரமெனல் வேண்டுமாகலான், அவ்வாறு வரையறுத்துக் கூறலமையாதென்பது. பிறவும் அன்ன.
'இனி, அவற்றைப் பொருளுறுப்பென்பதல்லது அணி யென்பவாயிற் சாத்தனையுஞ் சாத்தனா லணியப்பட்ட முடியுந் தொடியும் முதலாயவற்றையும் வேறு கண்டாற்போல. அவ் வணியுஞ் செய்யுளின் வேறாகல் வேண்டுமென்பது.
இனி, செய்யுட்கு அணிசெய்யும் பொருட்படை எல்லாங் கூறாது சிலவே கூறி ஒழியின் அது குன்றக் கூறலாமென்பது.'
7713
உவமை தொல்காப்பியத்திலுள்ள உவமவியலில் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதன் வகைகளில் உள்ளுறை யுவமம் என்பது மிகச் சிறந்ததாகும். அதைத் தமிழர் அகப்பொருட் செய்யுள்களில் கையாண்டு வந்தனர். அது ஒரு நாட்டு வரணனையாய், அல்லது கருப்பொருட்டொழிலைக் கூறுவதா யமைந்து, அந்நாட்டரசனின் இயலையும் செயலையுங் குறிப்பாய்த் தெரிவிப்பதாகும். இது “மன்ன னெப்படி மன்னுயி ரப்படி” என்னும் நெறிமுறை பற்றியது.
உள்ளுறையுவமம்.
உள்ளுறுத் தியற்றப்படும்
கா:"வீங்குநீ ரவிழ்நீலம் பகர்பவர் வயிற்கொண்ட ஞாங்கர் மலர்சூழ்தந் தூர்புகுந்த வரிவண்
டோங்குய ரெழில்யானைக் கனைகடங் கமழ்நாற்ற மாங்கவை விருந்தாற்றப் பகலல்கிக் கங்குலான் வீங்கிறை வடுக்கொள வீழுநர்ப் புணர்ந்தவர் தேங்கமழ் கதுப்பினு ளரும்பவிழ் நறுமுல்லை பாய்ந்தூதிப் படர்தீர்ந்து பண்டுதா மரீஇய
""
உவமம்
பூம்பொய்கை மறந்துள்ளாப் புனலணி நல்லூர். (கலித்.66)
இதனுள், 'வீங்குநீர்' பரத்தையர் சேரியாகவும், அதன் கண் அவிழ்ந்த நீலப்பூக் காமச்செவ்வி நிகழும் பரத்தையராகவும், பகர்பவர், பரத்தையரைத் தேரேற்றிக்கொண்டுவரும் பாணன் முதலிய வாயில்களாகவும், அம் மலரைச் சூழ்ந்த வண்டு தலை வனாகவும், யானையின் கடாத்தை ஆண்டுறைந்த வண்டுகள்
13 தொல். உவ. 37, பேரா. உரை.