உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 15.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம்

201

நாடகத்தை முன்னோர் (1) வசைக்கூத்து, புகழ்க்கூத்து, (2) வேத்தியற்கூத்து, பொதுவியற்கூத்து, (3) வரிக்கூத்து, வரிச்சாந்திக் கூத்து, (4) சாந்திக்கூத்து, வினோத (இன்ப)க் கூத்து, (5) ஆரியக் கூத்து, தமிழக்கூத்து, (6) இயல்புகூத்து, தேசிகக்கூத்து, (7) அகக்கூத்து, புறக்கூத்து எனப் பலவகையில் இவ்விரண்டாக வகுத்தனர்.

இனி, உலகியற்கூத்து, தேவியற்கூத்து என வகுக்கவும் இடமுண்டு. தேவியலாவன அரங்கேற்றுகாதையிற் கூறப்படும் 11 ஆடல்கள் போல்வன. சாந்திக்கூத்தின் வகை :

(1) சொக்கம் - தனிநடம் (சுத்தநிருத்தம்).

(2) மெய்- தேசி, வடுகு, சிங்களம்.

(3) அவிநயம் - கதைதழுவாது பாட்டின் பொருளுக்கேற்ப வல்லபஞ்செய்வது.

(4) நாடகம் கதை தழுவிவருவது.

-

அவிநயம் (அபிநயம்) என்னுஞ்சொல் ஓர் இருபிறப்பி.

விநோதக்கூத்தின் வகை

(1) குரவை

(2) கலிநடம் - கழாய்க்கூத்து

(3) குடக்கூத்து

(4) கரணம்

(5) நோக்கு-மாயம், கண்கட்டு முதலியன.

(6) தோற்பாவை

(7) நகைத்திறச்சுவை.

சிலர் நகைத்திறச்சுவைக்குப் பதிலாக வெறியாட்டைக் கூறுவர்.

வரிக்கூத்து கண்கூடுவரி, காண்வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சிவரி, காட்சிவரி, எடுத்துக்கோள்வரி என எட்டுவகைப்படும்.

அவிநயம் வெகுண்டோன், ஐயமுற்றோன், சோம்பினோன், களித்தோன், உவந்தோன், அழுக்காறுடையோன், இன்பமுற்றோன்,